zondag 23 november 2014

வானத்தில் இருந்து வரும் ஸ்னைப்பர் ரவைகள்: குறிவைப்பது யாரை ?


ஒரு நாளைக்கு குறைந்தது 8ISIS தீவிரவாதிகளை, ஸ்னைப்பர் தாக்குதல் மூலம் தாம் கொன்றுவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. SAS என்று அழைக்கப்படும் ஒரு பிரிவினர் குறிசுடுவதில்(ஸ்னைப்பர்) பயிற்சிபெற்றவர்கள் ஆவர். இவர்கள் பாலைவனங்களில் ஹெலிகாப்டரில் ஸ்னைப்பர் துப்பாக்கியோடு பயணிக்கிறார்கள். தீவிரவாதிகள் "மோட்டார் சைக்கிள் குழு" என்று ஒன்றை வைத்திருக்கிறார்கள். நான்கு சக்கரன் கொண்ட மற்றும் பாலைவனத்தில் மிகவும் வேகமாகச் செல்லக்கூடிய இந்த மோட்டார் சைக்கிளை வைத்தே, இந்த தீவிரவாதிகள் பல நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களே சிறிய ஆயுதங்களை கடத்துவது, தொடர்பாடல்களை ஏற்படுத்துவது என்பதற்கு உதவுகிறார்கள்.
இவர்களை குறிவைத்தே அமெரிக்க துருப்புகள் பாரிய தாக்குதலில் இறங்கியுள்ளார்கள். பாலைவனத்தில் இவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்லும்வேளை ஹெலிகாப்டரில் செல்லும் அமெரிக்க ஸ்னைப்பர்களிடம் சிக்கினால் அதோ கதிதான். தப்பிச் செல்லவே முடியாது. 1000 அடி உயரத்தில் இருந்து கூட அவர்கள் குறிதவறாமல் சுடவல்லவர்கள். கடந்த 4 வாரங்களில் மட்டும் சுமார் 100 தீவிரவாதிகளை இவ்வாறு தாம் சுட்டுக்கொன்றுள்ளதாக அமெரிக்க படைப்பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளார்கள். நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளை இவ்வாறு கொலைசெய்தால் கூட, மேலும் பலர் இந்த இயகத்தில் சென்று இணைந்து கொள்கிறார்கள்.
இதனைத்தான் அமெரிக்காவால் தடுக்கவே முடியவில்லை. பல மேற்குலக நாடுகளில் உள்ளவர்கள் இந்த இயக்கத்தில் சேர்வதால் அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் கவலையடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten