woensdag 19 november 2014

சர்வாதிகார ஆணவம் வேண்டாம்!- ஜே.வி.பி கொழும்பில் பேரணி!

வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார் மாலக! மருத்துவமனை வாசம் முடிவு
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 11:38.15 PM GMT ]
விளக்கமறியல் கைதியாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாலக சில்வா, நேற்று செவ்வாயக்கிழமை மாலை திடீரென்று வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு, கிருலப்பனையில் வைத்து வெளிநாட்டு யுவதியொருவரை தகாத நோக்கத்துடன் தொல்லைப்படுத்தி, அதனைத் தடுக்க முயன்ற யுவதியின் காதலன் மற்றும் இன்னொரு ஜேர்மன் பிரஜை ஆகியோரை மாலக குழுவினர் அண்மையில் தாக்கியிருந்தனர்.
இது தொடர்பான பொலிசாரின் முறைப்பாட்டின் பேரில் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கைது செய்யப்பட்டிருந்த மாலக சில்வா, இன்று வரை கொழும்பு தேசிய மருத்துவமனை கட்டண வார்ட்டில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
விளக்க மறியல் கைதி என்ற வகையில் அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று நண்பகல் மாலகவுக்கு எதிரான வழக்கு விசாரிக்கப்பட்ட போது நீதிபதி விளக்கமறியல் தண்டனையை நீடித்திருந்தார்.
பின்னர் திடீரென்று நேற்று மாலை தேசிய மருத்துவமனைக்கு விஜயம் செய்த நீதிபதி சஹாப்தீன், மாலகவை வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லுமாறு உத்தரவிட்டார்.
மாலகவின் மருத்துவ அறிக்கைகளையும் பார்வையிட்ட நீதிபதி சஹாப்தீன், தேவையேற்படின் சிறைச்சாலை மருத்துவமனையில் மாலகவிற்குத் தேவையான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து தற்போது மாலக சில்வா, வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszBScKYjx1.html


சர்வாதிகார ஆணவம் வேண்டாம்!- ஜே.வி.பி கொழும்பில் பேரணி
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 11:48.31 PM GMT ]
சர்வாதிகார ஆணவம் வேண்டாம் என்ற கோஷத்துடன் ஜே.வி.பி. யினர் நேற்று கொழும்பில் பிரமாண்ட பேரணியொன்றை நடத்தியுள்ளனர்.
ஜனநாயகத்துக்கான மக்கள் அமைப்புடன் இணைந்து ஜே.வி.பி. யினர் மேற்கொண்ட குறித்த பேரணி நேற்று மாலை மருதானை ஆனந்த கல்லூரி அருகில் ஆரம்பித்து, புறக்கோட்டை பரடைஸ் மைதானத்தில் முடிவடைந்திருந்தது.
இதில் சுமார் பத்தாயிரம் பேரளவில் கலந்து கொண்டிருந்தனர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதித் தேர்தல் வேண்டாம், சர்வாதிகார ஆணவம் வேண்டாம், போன்ற கோஷங்களை எழுப்பியவாறு சுலோகங்களையும் தாங்கியிருந்தனர்.
குறித்த பேரணி காரணமாக மருதானை முதல் புறக்கோட்டை வரையான பாதைகளில் நேற்று மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjx2.html

Geen opmerkingen:

Een reactie posten