zondag 23 november 2014

ஆளுங்கட்சியின் வெறியாட்டம் ஆரம்பம்! புத்தளம், காலியில் துப்பாக்கிச்சூடு!

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வரவு காரணமாக கடும் தோல்விப் பயத்தில் உள்ள ஆளுங்கட்சி வன்முறை வெறியாட்டங்களை கட்டவிழ்த்து விட ஆரம்பித்துள்ளது.
இதன் ஆரம்ப கட்ட வன்முறை வெறியாட்டங்கள் கடந்த வெள்ளிக்கிழமை பாணந்துறையில் அரங்கேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றிரவு நாட்டின் பல பகுதிகளிலும் அச்சுறுத்தல்கள், வன்முறைகள் பரவலாக நடைபெற்றிந்தன.
இவற்றில் மூன்று இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடைபெற்றுள்ளமை பொலிஸ் திணைக்கள வட்டாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
புத்தளம் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் இருவரின் வீடுகள் மீது நேற்றிரவு கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரத்தில் நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அதிர்ஷ்டவசமாக எவரும் காயமடையவில்லை.
இதற்கிடையே காலி பெந்தறையில் உள்ள ஆளுங்கட்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவரது வீடு மீதும் நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வீடு சேதமாக்கப்பட்டுள்ளது.
பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பேரிலேயே குறித்த பிரதேச சபை உறுப்பினர் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குருநாகல் பகுதியில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக தற்போதைக்கு இரண்டு பேர் குருநாகல் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgw0.html

Geen opmerkingen:

Een reactie posten