[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 11:05.00 AM GMT ]
அதன்படி, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், 17வது அரசியல் திருத்தத்தினை அமுல்படுத்துதல், தேர்தல் முறைமையை மாற்றியமைத்தல் போன்ற முக்கிய அம்சங்கள் தொடர்பில் சந்திரிகா இணக்கப்பாடொன்றுக்கு வந்திருப்பதாகவும், அதுசார் உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு அவர் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல கட்சித் தலைவர்களும் இவ்வுடன்படிக்கையில் கையெழுத்திட விருப்பம் தெரிவித்துள்ளதோடு, தற்போது சிங்கப்பூர் சென்றிருக்கும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா நாடு திரும்பியவுடன் இவ்வுடன்படிக்கை கைச்சாத்திடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYnsy.html
மாடி வீடு வேண்டாம்! தனி வீடுதான் வேண்டும்: தீயில் வீட்டை இழந்த மக்கள் கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 12:08.58 PM GMT ]
டயகம மேற்கு தோட்டத்தின் 2ம் இலக்க பிரிவில் நேற்று இரவு 7 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 குடியிருப்பு அறைகள் முற்றாக எரிந்து சாம்பலாகியது.
இந்த விபத்தில் எவருக்கும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. எனினும் வீட்டுபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள் தீக்கு இரையாகியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
லயன் குடியிருப்பு என்ற படியாலே 24 வீடுகள் எரிந்துள்ளன. தனித்தனி வீடுகள் என்றால் இவ்வாறு நடத்து இருக்காது.
எங்களுக்கு மாடி வீடு வேண்டாம். தனி வீடு கட்டித் தரவும் என பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYns0.html
தமிழக மீனவர்களை விடுவிப்பதற்காக மேன்முறையீடு தாக்கல்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 02:22.32 PM GMT ]
இந்தநிலையில் குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டு அந்த நீதிமன்றம் விசாரணைக்கான திகதியை அறிவிக்கும் என்று சிரேஸ்ட சட்டத்தரணி அனில் சில்வா இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இந்த மனு நேற்றே சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இன்று அது தாக்கல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பி;ட்டுள்ளார்.
புதுடில்லி, இராஜதந்திர ரீதியிலும் சட்டரீதியாகவும் இந்த விடயத்தை அணுகியுள்ளது.
புதுடில்லி, இராஜதந்திர ரீதியிலும் சட்டரீதியாகவும் இந்த விடயத்தை அணுகியுள்ளது.
இதன் ஒரு கட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்திய பிரதமமந்திரி நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதியுடன் தொலைபேசி ஊடாக உரையாடியமையும் குறிப்பிடத்தக்கது.
2011ம் ஆண்டு நவம்பர் 28ம் திகதியன்று தமிழக மீனவர்கள் ஐந்து பேரும் இலங்கை மீனவர்கள் 3 பேரும் போதைவஸ்து வைத்திருந்ததாக குற்றம் சுமத்தி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYns4.html
இந்தியாவின் வாகனங்களை பெற்றுக்கொள்ள வேண்டாம் என வடமாகாண உறுப்பினர்களுக்கு மொட்டைக் கடிதம்
[ செவ்வாய்க்கிழமை, 11 நவம்பர் 2014, 02:27.30 PM GMT ]
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்திய அரசாங்கத்தினால் ஒரு தொகுதி வாகனங்களை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அவைத்தலைவர் ஆகியோருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் மேற்படி வாகனங்களுக்கான வருமான வரி செலுத்தும் சிக்கலினால் சற்று இழுபறி நிலை உருவானது.
மேலும் மேற்படி வாகனங்களில் சிலவற்றை தமக்கு வழங்கவேண்டும். எனவும், மற்றய வாகனங்களை தமது அமைச்சுக்கு ஊடாகவே வடமாகாணசபையினருக்கு வழங்கவேண்டும். எனவும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச கூறிவந்தார்.
இதனால் அவ்வாறான வாகனங்கள் தமக்கு தேவையில்லை. என மறுத்த முதலமைச்சர், வடமாகாணசபையினருடன் முட்டிக்கொண்டு ஒரு கட்டத்தில் அந்த வாகனங்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தாங்களே எடுத்துக் கொள்ளும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் மேற்படி சிக்கல் தொடர்பாக ஓரளவு சமரசம் காணப்பட்ட நிலையில் தமக்கு முன்னதாகவே வாகனங்கள் கிடைத்திருக்கும் நிலையில், வரும் வாகனங்களை உற்சாகமாக செயற்படும் உறுப்பினர்களுக்கு வழங்கலாம். என முதலமைச்சர் தீர்மானித்திருப்பதாக முன்னர் அறிய முடிந்தது.
இந்நிலையில் மேற்படி வாகனங்கள் வரவுள்ளதாகவும் அவை 7 எனவும் அண்மையில் செய்திகள் கசிந்திருந்தன. இந்நிலையில் நேற்றய தினம் மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும், அவர்களுடைய தபால் முகவரிக்கு மொட்டை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த கடிதத்தில் யார் அனுப்பியவர்? எங்கிருந்து அனுப்பப்பட்டது? என்பது தொடர்பில் எவ்விதமான தகவல்களும் இல்லை. என உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஒருவர் கூட மிச்சமில்லாமல் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மேற்படி கடிதத்தில் வாகனங்களை வழங்கி இந்திய அரசாங்கம் வடமாகாணசபையினை தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளப் பார்க்கின்றது. எனவே வாகனத்தை பெற்றுக் கொள்ளாதீர்கள். என கூறப்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மேற்படி விடயம் தொடர்பில் மாகாணசபையின் அவைதலைவருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது. அவ்வாறான வாகனங்கள் வருவது தொடர்பில் உத்தியோகபூர்வமான அறிவித்தல்கள் எதனையும் தாம் பார்க்கவில்லை. என கூறியிருப்பதுடன் மேற்படி மொட்டைக் கடிதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதை ஒத்துக் கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSVKYns5.html
Geen opmerkingen:
Een reactie posten