[ திங்கட்கிழமை, 17 நவம்பர் 2014, 11:55.55 PM GMT ]
கொழும்பு 2ல் பணியாற்றும் இந்த ஊடகவியலாளர் வழங்கிய முறைப்பாட்டின் பேரிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தம்முடன் நட்புக் கொள்ளுமாறு கூறியே குறித்த பெண், தொந்தரவு தருவதாக ஊடகவியலாளர் முறையிட்டுள்ளார்.
இதனையடுத்து நேற்று கொழும்பு கோட்டை நீதிவான், குறித்த பெண் பயன்படுத்தும் கையடக்க தொலைபேசி இலக்கத்தை கண்டறியுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBSbKYjt0.html
அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே தீர்வையற்ற வாகனங்கள் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்!- சுசில்
[ செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014, 01:14.39 AM GMT ]
அரசாங்கத்துடன் ஒழுங்கான முறையில் தொடர்புகளைப் பேணிணால் மட்டுமே தீர்வையற்ற வாகனங்கள் வழங்கப்படும்.
வட மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படவேண்டிய தீர்வையற்ற வாகனங்களை அரசாங்கம் வழங்காத காரணத்தினால், இந்திய அரசாங்கம் எட்டு நவீன வாகனங்களை மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்க உள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அண்மையில் பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தீர்வையற்ற வாகனங்கள் வழங்கப்பட வேண்டுமென அரசியல் அமைப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
திறைசேரியின் தீர்மானங்களுக்கு அமையவே காலம் தாழ்த்தியேனும் வாகனங்கள் வழங்கப்படும்.
மாகாணசபை உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவது அவர்களின் உரிமை அல்ல எனவும் அரசாங்கத்தின் தீர்மானம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவினால் மாகாண சபை உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவது தொடர்பில் எவ்வித ஆட்சேபனையும் கிடையாது.
ஏற்கனவே இந்தியா பெருந்தோட்டப் பகுதிகளில் சிறிய ரக பஸ்களை வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு எட்டு வாகனங்களை வழங்குவது குறித்த நடவடிக்கைகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjt5.html
Geen opmerkingen:
Een reactie posten