[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 11:48.31 PM GMT ]
கடந்த 15ம் திகதியன்று இவர்கள், அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்களை சந்தித்து இந்த மன்னிப்பை கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ப்ரபெசனல் ஜேனலிஸ்ட் எசோஷியேசன்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த இணையத்தள அமைப்பினர் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, கெஹலிய ரம்புக்வெல்ல, ஊடக அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத் ஆகியோரை சந்தித்து கடந்த கால செயல்களுக்காக மன்னிப்பை கோரினர்.
இந்தநிலையில் இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ள தமது பல இணையத்தளங்களை மீண்டும் செயற்பட அனுமதிக்கவேண்டும் என்றும் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்தனர்.
அவ்வாறு தமது இணையத்தளங்கள் செயற்பட அனுமதிக்கப்பட்டால் தாம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின்போது அரசாங்கத்துக்கு ஆதரவாக செயற்படவும் அவர்கள் உறுதியளித்தனர்.
எனினும் அரசாங்கத்தரப்பு, குறித்த இணையத்தளங்களுக்கு தாம் நிதியுதவியை வழங்கமுடியாது என்று மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkw5.html
ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளருக்கு எதிராக புலிகள் சதி! - வடக்கில் மரணபயம் இல்லை!- அமைச்சர் விமல் வீரவன்ச
[ ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2014, 11:53.57 PM GMT ]
வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊழியர்களுக்கான வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது ஆதரவு சக்திகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இல்லாத இலங்கையை உருவாக்கும் நோக்கம் உள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது பல்வேறு குழுக்கள் விடுதலைப் புலி ஆதரவாளர்களின் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் களமிறங்கியுள்ளன.
இன்னும் சிலருக்கு தற்போது ராஜபக்ச எதிர்ப்புணர்வு தோன்றியுள்ளது. மேற்கத்தேய நாடுகளின் தேவைக்கேற்ப அவர்கள் செயற்பட்டு, ஜனாதிபதியைத் தோற்கடிக்க முயற்சிக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு 20 ஆண்டுகள் எதிர்க்கட்சிகள் கழிந்து விட்டதன் காரணமாக தற்போது அதிகார ஆசை வந்து விட்டது. எனினும் எதிர்வரும் தேர்தலில் பொதுமக்கள் இவர்களுக்கு நல்லதொரு பாடம் புகட்டுவார்கள் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இன்று மரணபயம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது! அமைச்சர் விமல் வீரவன்ச
வடக்கில் வாழும் தமிழ் மக்கள் முன்பு எதிர்கொண்ட மரணபயம் தற்போது இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
மஹரகமவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவன்ச, ஒரு காலத்தில் இலங்கை பூராகவும் இரத்த ஆறு ஓடிக் கொணடிருந்தது. மரணத்தின் நிழல் படிந்த பூமியாக இந்நாடு அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
ஆனால் இன்று அந்த நிலை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சிங்களவர்கள் மட்டுமன்றி வடக்கில், கிழக்கில் வாழும் தமிழ் மக்களும் நிம்மதியான வாழ்வை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். வடக்கில் வாழும் தமிழர்கள் ஒரு காலத்தில் எதிர்நோக்கிய மரணபயம் தற்போது அங்கு இல்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தான் இந்த நிலையை ஏற்படுத்தித் தந்துள்ளார் . அவரால் தான் நாட்டின் அனைத்து மக்களும் நிம்மதியாக வாழும் சுபீட்சமான சூழல் உருவாகியுள்ளது என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSaKYkw6.html
Geen opmerkingen:
Een reactie posten