zaterdag 22 november 2014

விடுதலைப் புலிகள் பாணியில் உள்நாட்டிலேயே "சட்டலைட்" போனைப் பாவித்த எதிர்கட்சிகள் !


பின்லேடனை சுட்டுக்கொன்ற நாட்டின் தூதுவர்கள், பல சட்டலைட் போன்களை எதிர்கட்சியிடம் கொடுத்துள்ளார்கள். ஜனாதிபதி தேர்தலை அறிவிக்க முன்னர் இருந்தே ரணில், சந்திரிக்கா, சரத்பொன்சேகா போன்ற பல நபர்களது தொலைபேசிகள் கோட்டபாயவினால் ஒட்டுக்கேட்க்கப்பட்டு வந்துள்ளது. இதனை அவர்களும் நன்றாக அறிவார்கள். அவர்கள் செய்யும் அரசியல் நகர்வுகளை மகிந்தர் அன் இதனூடாகத் தான் அறிந்து வந்தார்கள். இதனை சாமர்த்தியமாக சமாளிக்கவே இந்த வெளிநாடு சாட்டலைட் போன்களை குறிப்பிட்ட சில எதிர்கட்சி தலைவர்களுக்கு கொடுத்துள்ளது என்று கொழும்பில் இருந்து கசியும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இதனைப் பாவித்தே முக்கிய தொலைபேசி உரையாடலை அவர்கள் மேற்கொண்டு உள்ளார்கள்.
மகிந்தர் கட்சியில் இருந்து தற்போது பல அமைச்சர்களும் முக்கிய புள்ளிகளும் சந்திரிக்காவின் தூண்டுதலின் பேரில், எதிர்கட்சியோடு இணைந்துள்ளார்கள். இவர்களை தொடர்புகொள்ளவும் இவர்களோடு முக்கியமான விடையங்களை உரையாடவும் இந்த சாட்டலைட் போன்கள் உதவியுள்ளது. மகிந்தருக்கு நிகரான பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்து, ஆட்சி அதிகாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியில் பின்லேடனை சுட்டுக்கொன்ற நாடு மிகத் தீவிரம் காட்டி வருகிறது. இதேவேளை குறிப்பிட்ட இந்த நாடு தான் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் நெருக்கமானது.
இதேவேளை தேர்தல் செலவுகளில் பெரும் பங்கை கூட இந்த நாடு ரணிலுக்கு கொடுக்கவுள்ளதாக அரசல் புரசலான செய்திகள் கொழும்பில் இருந்து கசிந்துள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten