தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 23 november 2014

ரணில், மைத்திரிபால, சோபித தேரர் பேச்சுவார்த்தை!: ஜே.வி.பி.யும் பங்கேற்பு?- பொது கூட்டணியில் ஜே.வி.பி இணையாது!

ராஜபக்சவுடன் பேசி மீனவர்கள் விடுதலைக்காக சல்மான்கான் உதவினார்: புதிய தகவல்கள்
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 09:55.46 AM GMT ]
இராமேசுவரம் தங்கச்சி மடம் மீனவர்கள் 5 பேருக்கு போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்ச 5 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இந்த நிலையில் 5 மீனவர்கள் விடுதலைக்கு நடிகர் சல்மான்கானும் மறைமுகமாக உதவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, தூக்கு தண்டனையை எதிர் நோக்கி இருந்த 5 பேரும் விடுதலையானது தமிழக மக்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக 5 மீனவர்களையும் மீட்க கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு பலமுறை கடிதங்கள் எழுதியது. தமிழகத்தில் போராட்டங்களும் நடைபெற்றன.
இதையடுத்து மத்திய அரசு தூதரகம் மூலம் நடவடிக்கையில் இறங்கியது. பிரதமர் மோடி இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் பேசினார்.
மேலும் இலங்கையில் ராஜபக்ச மந்திரி சபையில் உள்ள தமிழ் அமைச்சர்களும் ராஜபக்சவை சந்தித்து 5 தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு ராஜபக்ச சம்மதித்தார்.
இந்த நிலையில் 5 மீனவர்கள் விடுதலைக்கு நடிகர் சல்மான்கானும் மறைமுகமாக உதவியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் சல்மான்கானின் தங்கை திருமணம் ஐதராபாத்தில் நடந்தது. இதற்கான திருமண அழைப்பிதழை இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு கொழும்பில் உள்ள தனது நண்பரும் பத்திரிகையாளருமான ரஜத் சர்மா மூலம் கொடுத்து அனுப்பினார்.
ரஜத் சர்மா ராஜபக்சவை நேரில் சந்தித்து சல்மான்கான் தங்கை திருமண அழைப்பிதழை கொடுத்தார்.
அப்போது ரஜத் சர்மா பத்திரிகையாளர் என்ற முறையில் 5 தமிழக மீனவர்களின் தூக்கு தண்டனை பிரச்சினையை எடுத்துக்கூறி அவர்களை விடுதலை செய்ய கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்று பல வழிகளில் இருந்தும் நட்பு வட்டாரங்களில் இருந்தும் மீனவர்களை விடுதலை செய்ய கோரிக்கை வந்ததால் ராஜபக்ச அவர்களை விடுதலை செய்ய முன்வந்தார் என்றும் கூறப்படுகிறது.
பத்திரிகையாளர் ரஜத் சர்மா நடிகர் சல்மான்கானுக்கு மட்டுமல்ல, பிரதமர் நரேந்திர மோடிக்கும், அதிபர் ராஜபக்சவுக்கு நண்பர். பாராளுமன்ற தேர்தலின் போது மோடியை அவர் டி.வி.க்காக சந்தித்து பேட்டி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சல்மான்கான் அழைப்பை ஏற்று அவரது தங்கை திருமண வரவேற்பில் கலந்து கொள்ள ராஜபக்ச தனது மகன் நமால் ராஜபக்சவை அனுப்பி வைத்தார். அவர் மணமக்களை வாழ்த்தி எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதில் ‘‘சல்மான்கான் தங்கை திருமண வரவேற்பில் கலந்து கொண்டது அன்பான ஒன்று’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgxz.html
ரணில், மைத்திரிபால, சோபித தேரர் பேச்சுவார்த்தை!: ஜே.வி.பி.யும் பங்கேற்பு?- பொது கூட்டணியில் ஜே.வி.பி இணையாது
[ ஞாயிற்றுக்கிழமை, 23 நவம்பர் 2014, 09:59.33 AM GMT ]
எதிர் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இன்று மாலை சோபித தேரரை சந்தித்து உரையாடவுள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நீதியான சமூகமொன்றுக்கான தேசிய அமைப்பின் ஆதரவை பெற்று கொள்வது தொடர்பில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாக எதிர் கட்சி தலைவரின் அலுவலக வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
மாதுளுவாவே சோபித தேரரின் விகாரையான கோட்டே நாகவிகாரையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
தற்போதைய நிலையில் மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ள வாக்குறுதிகள் பாராட்டத்தக்கவை என்றும், தனது ஆதரவு தொடர்பான நிலைப்பாட்டை கலந்தாலோசனையின் பின்னர் பகிரங்கப்படுத்துவதாகவும் மாதுளுவாவே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜே.வி.பி.யினரின் ஆதரவை பெற்று கொள்வது தொடர்பிலும் ரணில் விக்கிரமசிங்க தரப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
எனினும் தமது கட்சியின் உயர்மட்ட குழுவில் கலந்தாலோசிக்காமல் எந்தவொரு முடிவையும் தெரிவிக்க முடியாது என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
வேட்புமனுத்தாக்கலுக்கு ஒரு நாள் முன்னதாக தமது முடிவு அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டணியில் ஜே.வி.பி இணையாது
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனித்து செயற்பட ஜே.வி.பி தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சிகளின் பொது கூட்டணியில் இணையாது செயற்பட தீர்மானித்துள்ளதாக ஜே.வி.பியின் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க தொடர்ந்தும் போராட போவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRXKYgx0.html

Geen opmerkingen:

Een reactie posten