vrijdag 14 november 2014

35 ஆயிரம் தற்காலிக அரச ஊழியர்களுக்கு நிரந்த நியமனம்: அரசாங்கம்!

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிக்குவாரா ரவி கருணாநாயக்க?
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 06:39.19 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான அந்நிய செலாவணி வழக்கு தற்போது சூடுபிடித்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக ரவி கருணாநாயக்கவை ஆளுங்கட்சியில் இணைத்துக் கொள்வது அல்லது அவரது அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருவது என்ற முனைப்புடன் ஆளுங்கட்சி தற்போது வேகமாக காய் நகர்த்தி வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக மந்த கதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான அந்நிய செலாவணி மோசடி வழக்கு தற்போது சூடு பிடித்துள்ளது.
அமெரிக்க வாழ் தமிழரான ராஜ் ராஜரத்தினம் மூலம் கோடிக்கணக்கான ரூபா பணத்தை செலாவணி மோசடி செய்து பெற்றுக் கொண்டதாக ரவி கருணாநாயக்க மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கொன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.நேற்று இந்த வழக்கில் திறைசேரியின் முன்னாள் செலாவணிக் கட்டுப்பாட்டாளர் குமார பெரேரா சாட்சியமளித்தார்.
இதன்போது அந்நிய செலாவணி மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்க மூன்று தடவைகள் நேரடியாக விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக அவர் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
ரவி கருணாநாயக்க அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளாத பட்சத்தில் எதிர்வரும் நாட்களில் இந்த வழக்கு தொடர்பான நடவடிக்கையொன்றில் அவர் கைதுசெய்யப்படலாம் என்றும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlp5.html

பாடசாலை அதிபா் வேண்டாம் என கோரி பெற்றோர்கள் ஆா்ப்பாட்ட​ம்
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 06:58.00 AM GMT ]
ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா மொக்கா தமிழ் மகா வித்தியாலய அதிபர் வேண்டாம் என கோரி 100க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பாடசாலைக்கு முன்னால் இன்று காலை 9 மணியளவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சுமார் 3 மணித்தியாலயம் இவ் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது. பாடசாலை அதிபர் 20 வருட காலமாக பணிப்புரிகின்றார். இந்த அதிபரினால் எங்களது பிள்ளைகளுக்கு முறையான கல்வி நடவடிக்கைகள் இல்லை. ஆரம்பத்தில் 950 பேர் இப்பாடசாலையில் கல்வி கற்றார்கள் ஆனால் தற்போது 400 பேர் தான் கல்வி நடவடிக்கைகளில் உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதனாலேயே தாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
அத்தோடு அதிகளவில் காசு வசூலிப்பதாகவும் அதுமட்டுமில்லாமல் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் ஆசிரியர்களுக்கும் அதிபர்க்கும் அடிக்கடி முரண்பாடு ஏற்படுவதாகவும் இதனால் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர்கள் சுட்டிக்காட்டினர்.
இச்சம்பவம் தொடர்பாக ஹற்றன் கல்வி வலயத்தின் உயர் அதிகாரிடம் வினவியபோது,
அதிபர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கயிருப்பதாகவும் 2015 ஜனவரி மாதத்திலிருந்து இடமாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கயிருப்பதாக அவர் தெரிவித்தார். அத்தோடு இது தொடர்பாக பெற்றோர்களிடம் கலந்துரையாடியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த பாடசாலைக்கு போக்குவரத்து வசதிகள் அதிகளவில் இல்லாத காரணத்தினால் மேற்படி பாடசாலையிலேயே தொடர்ந்து அதிபர் பணிப்புரிந்ததாக அவர் தெரிவித்தமை குறிப்பிடதக்கது.
அதிகாரிகள் கலந்துரையாடியதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கலைந்து சென்றார்கள்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlp6.html
35 ஆயிரம் தற்காலிக அரச ஊழியர்களுக்கு நிரந்த நியமனம்: அரசாங்கம்
[ வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2014, 06:59.01 AM GMT ]
அரச சேவையில் பணியாற்றும் முறைசாரா மற்றும் தற்காலிக ஊழியர்கள் 35 ஆயிரம் பேர் நிரந்தரமாக்கப்பட உள்ளனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான பரிந்துரையை செய்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் 5000 தபால் சேவை ஊழியர்களுக்கு இடையில் அண்மையில் அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதியின் செயலாளர் இதனை கூறியுள்ளார்.
முறைசாரா மற்றும் தற்காலிகமாக பணியாற்றும் ஊழியர்கள் அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளனர்.
தபால் திணைக்களத்தில் இப்படியான ஆயிரத்து 500 ஊழியர்கள் பணிப்புரிந்து வருகின்றனர்.
நாளாந்த சம்பளம் என்ற அடிப்படையில் பணிப்புரிந்து வரும் இந்த ஊழியர்கள் ஏனைய அரச ஊழியர்கள் அனுபவிக்கும் சிறப்புரிமைகளை அனுபவிப்பதில்லை என்றும் லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் இம்முறை சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதுவரை தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டங்களில் இப்படியான வரப்பிரசாதங்கள் வழங்கப்பட்டதில்லை எனவும் ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBSYKYlp7.html

Geen opmerkingen:

Een reactie posten