தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 14 november 2014

25 வருடங்களின் பின் சிறையிலிருந்து விடுதலையான தமிழர்! உண்மையில்லை என சகோதரி மறுப்பு !

யாழ்.குடாநாட்டிலிருந்து 1990ம் ஆண்டு காணாமல் போனவர் 25 வருடங்களின் பின்னர் சிறையிலிருந்து விடுதலையானார் என ஊடகங்களில் வெளியான செய்தியில் உண்மையில்லையென உறவினர்கள் மறுத்துள்ளனர்.
குறித்த நபர் தொடர்ந்தும் சிறையிலேயே இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
1990ம் ஆண்டு காணாமல்போன நபர் சிறையிலிருந்து விடுதலை ஆனதாக சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் குறித்த நபரின் சகோதரி ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

என்னுடைய சகோதரர் வைரவநாதன் (தற்போதைய வயது 53) கடந்த 1991ம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்றினையடுத்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டார்.
அதன் பின்னர் எம்மால் நேரடியாக சென்று அவரை விடுவிக்க முடியவில்லை. மற்றும் அவர் ஒரு மனநோயாளி. எனவே உறவினர் ஒருவர் அவர் மனநோயாளி என்பதை உறுதிப்படுத்தும், ஆவணங்கள் மற்றும் வைத்திய அறிக்கைகளுடன் கொழும்புக்குச் சென்றிருந்தபோது போகும் வழியில் அவர் மாரடைப்பினால் உயிரிழந்தார். அதனால் அந்த ஆவணங்களும் தொலைந்து விட்டன. அதன் பின்னர் எங்களால் தேட முடியவில்லை. எங்களுடைய மற்றைய சகோதரர் ஒருவர் இந்தியா செல்லும் போது காணாமல்போய் விட்டார்.
மற்றய சகோதரி ஒருவர் இயற்கையிலேயே பாதிக்கப்பட்ட மாற்றுவலுவுள்ளவர். எங்களால் அவரை தேட முடியவில்லை.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாந்தோட்டை சிறைச்சாலையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் கூறப்பட்டுள்ள விடயம், உங்கள் உறவினர் உயிருடன் இருக்கிறார். அவரை நீங்கள் பார்வையிடலாம், அத்துடன் வழக்கறிஞ்ஞர் மூலம் பிணையில் எடுக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மற்றபடி அவர் விடுதலை செய்யப்படவில்லை. மேலும் அவர் காணாமல் போகவுமில்லை. கைது செய்யப்பட்டார். எனவே நாங்கள் நாளை அல்லது நாளை மறுதினம் அவரை பார்க்கச் செல்லவுள்ளோம் என்றார்.
தொடர்புபட்ட செய்தி
http://www.tamilwin.com/show-RUmszBSYKYls5.html

Geen opmerkingen:

Een reactie posten