தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 18 november 2014

2015ல் கனடா வரவேற்கும் 3 லட்சம் புதியவர்களும் 2014ம் ஆண்டு மாவீரர் நாள் குழப்பங்களும்!

மலேசியாவில் வாழும் ஈழத்தமிழ் அகதிகளில் மூன்று லட்சம் பேரை கனடா 2015ல் உள்வாங்கப் போகிறது.
ஈழத்தின் இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட எங்களையும் உள்வாங்க கனடாவில் உள்ளவர்கள் முயற்சிக்க வேண்டும் என்ற ஈழமக்களின் வேண்டுகோள் நியாயமானதே என லங்காசிறி வானொலியில் இவ்வாரம் இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும், கனடாவில் 2015ம் ஆண்டு புதிதாக வரவேற்கும் மூன்று லட்சம் பேரில் ஒருவராக நீங்கள் இருக்க வேண்டுமானால், என்ன தகுதிகள் தேவை என்பதையும் தெளிவாக விளக்கியதோடு மலேசியாவிலுள்ள தமிழர்கள் எவ்வாறு இதை அணுகலாம் என்பதையும் எடுத்துரைத்தார்.
மலேசியாவிலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் கனடா மாவீரர் நிகழ்வுகள் தொடர்பாக குற்றஞ்சாட்டுகின்ற விடயத்தில் ஓரளவு உண்மை இருக்கிறது.
இந்த இரு தரப்பினரும் ஒருவரோடு ஒருவர் இப்போதும் நட்புப் பாராட்டுபவர்கள், கொள்கை ரீதியில் மாத்திரம் தான் முரண்பட்டு நிற்கிறார்கள் என்றும், 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி வரை ஒரே நோக்கில் பயணித்தவர்கள்.
இறுதிக்கட்டப் போரின் முடிவு தாங்கள் எதிர்பார்த்தது போல அமையாதுவிட்டது தான் தற்காலிகமாக இரண்டு பிரிவுகளாக்கியுள்ளனர்.
இறுதிப் போரின் போது சேர்க்கப்பட்ட பணம் போருக்காக பாவிக்கப்பட்டிருக்க வேண்டிய தேவை இல்லாமல் போனபோது, அவை அசையாச் சொத்துக்களாக பெருமளவு மாற்றப்பட்டிருக்கின்றன என்பதை மக்கள் தெளிவாக அறிந்துள்ளனர் என்பது உள்ளிட்ட பல தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBScKYjwy.html

Geen opmerkingen:

Een reactie posten