1997ம் ஆண்டு திருகோணமலையில் உள்ள புல்மோடையில் தரித்து நின்ற சரக்கு கப்பல் ஒன்றின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி இருந்தார்கள். இக் கப்பல் அமெரிககவின் பினாமிக் கப்பல் என்ற விடையம் தற்போது தான் தெரியவந்துள்ளது. 1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 9ம் திகதி இத்தாக்குதல் நடைபெற்றது. வடக்கில் உள்ள இல்மனைட் என்னும் தாது அடங்கிய மண்ணை , அகழ்ந்து வெளிநாடுகளுக்கு சிங்கள அரசு விற்றுவந்தது. இதன் காரணமாக தமிழர் தயகப் பகுதிகளில் சுகாதர சீர்கேடுகள் ஏற்படும் என்றும், யாழ் பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் தொடர்ந்து கூறிவந்தார்கள். குறித்த தேதி அன்று, சீனாவின் கொடியுடன் இக் கப்பல் புல்மோடையில் நங்கூரமிட்டு நின்றிருந்தது. இக் கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் பாதுகாப்பையும் வழங்கி இருந்தார்கள்.
ஆனால் அப் பாதுகாப்பை எப்படி புலிகள் உடைத்தார்கள் என்று தெரியவில்லை. மதியம் 1.00 மணியளவில் அக் கப்பல் மீது பாரிய தாக்குதலை விடுதலைப் புலிகள் தொடுத்தார்கள். கப்பல் கடும் சேதமடைந்துள்ளது ஆனால் மூழ்கிப் போகும் அபாயம் இல்லையென்று அமெரிக்க தூதரக, தனது வாஷிங்டன் தலைமைக்கு அறிவித்துள்ளது. சீனாவின் கொடியோடு தரித்து நின்ற கப்பலை அமெரிக்க கம்பெனி ஒன்று தான் வாடகைக்கு அமர்த்தியதாகவும், இல்மனைட் மணலை ஏற்றிக்கொண்டு அது ஆம்ஸ்டடாம் சென்று, அங்கிருந்து அக்கப்பல் அமெரிக்கா செல்ல இருந்ததாகவும் தூதரகம் அறிவித்துள்ள செய்திகள் தற்போது விக்கி லீக்ஸால் வெளியிடப்பட்டுள்ளது. 2 படகுகளில் வந்த புலிகள் 4 கைக்குண்டுகளை கப்பலுக்குள் எறிந்துள்ளார்கள் என்றும், ரெலி என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பே இதுதொடர்பான செய்தியை தமக்கு தந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெலோ, டெலா, ரெலி, புளொட், என்று அன்றைய காலகட்டங்களில் பல விடுதலைப் போராட்ட அமைப்புகள் இருந்தது. பின்னர் அவை மறைந்தும் விட்டதும் யாவரும் அறிந்ததே. இன் நிலையில் புலிகள் மறுநாள் லண்டனில் இருந்து ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டார்கள். அதில் தமிழீழத்தின் தாதுக்களை, கனிமங்களை மற்றும் வளங்களை யாரும் சுரண்டவேண்டாம் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். மீறினால் தண்டனை கிடைக்கும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளார்கள் என்று சிமித் என்னும் அதிகாரி இலங்கையில் இருந்து வாஷிங்டனுக்கு பாதுகாப்பான கேபிள் மூலம் அறிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு இது அமெரிக்காவின் பினாமிக் கப்பல் என்று தெரியாது எனவும். ஆனால் அவர்கள் தமிழீழத்தின் வளங்களை பாதுகாக்கிறார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
http://www.athirvu.com/newsdetail/1087.html
Geen opmerkingen:
Een reactie posten