zondag 29 juni 2014

இலங்கை போன்ற ஆசிய நாடுகளையும் இந்தியாவையும் கைப்பற்ற ISIS., பயங்கரவாதிகள் திட்டம்......


ஈராக் முழுவதையும், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின், இந்தியாவை இலங்கை போன்ற ஆசிய நாடுகளையும் கைப்பற்றும், ஐ.எஸ்.ஐ.எஸ்.,சின், ஐந்தாண்டு சதித் திட்டம் வெளியானதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
5 ஆண்டு திட்டம் 'டுவிட்டர்' சமூக வலைத்தள பக்கத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பை சேர்ந்த, அய்மன் மொகைல்தின் என்பவர், ஒரு வரைபடம் மற்றும் திட்டத்தை வெளியிட்டுள்ளார். இந்த வரைபடத்தில், ஈராக் மட்டுமல்லாமல், ஆப்பிரிக்க நாட்டின் ஒரு பகுதி, இஸ்ரேல் உள்ளிட்ட அனைத்து மத்திய கிழக்கு நாடுகள், துருக்கி, இந்தியா, இலங்கை, வங்கதேசம் மற்றும் இந்தோனேஷிய நாடுகள், கருப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன.
மேலும் மியான்மர் மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளும், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளன. கருப்பு வண்ணமிட்ட பகுதிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக, பயங்கரவாத அமைப்பு குறிப்பிட்டு உள்ளது. மேலும், ஈராக் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின், அடுத்த ஐந்தாண்டுகளில், இந்தியாவை கைப்பற்றுவதற்கான திட்டங்கள் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும், சன்னி முஸ்லிம்களின் ஆட்சியை கொண்டு வருவதே, இந்த பயங்கரவாத அமைப்பின் திட்டமாக உள்ளது இந்த திட்ட முன்மொழிவால் இன்று உலகமே அதிர்ந்துபோயுள்ளது
http://www.athirvu.com/newsdetail/302.html

Geen opmerkingen:

Een reactie posten