zaterdag 24 mei 2014

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் நிலை! கவனிக்குமா தமிழக அரசு?

செம்மணி மனிதப் புதைகுழியில் பல அப்பாவி பொதுமக்களின் கதைகள்
[ சனிக்கிழமை, 24 மே 2014, 07:39.48 AM GMT ]
சித்திரவதைகள் சம்பந்தமான செய்திகளை பிரசுரிக்கும் பிரபல சர்வதேச மனித உரிமை சஞ்சிகையான, “சித்திரவதை - ஆசிய மற்றும் உலகளாவிய பார்வை” இம்முறை வெளியிட்டில் இலங்கையின் மனித புதைகுழிகள் தொடர்பில் இதுவரை வெளிவராத பல தகவல்களை வெளியிட்டுள்ளது.
மாதம் இருமுறை வெளியாகும் இந்த சஞ்சிகையில் இம்முறை வெளியிட்டில் பிரசுரிக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையில் சில காலங்களுக்கு முன்னர், யாழ். குடாநாட்டின் செம்மணி மனிதப் புதைகுழி சம்பந்தமாக விசாரணை நடத்திய இலங்கை சட்ட வைத்திய நிபுணர்கள் குழு கண்டறிந்த இதுவரை பகிரங்கப்படுத்தப்படாத முழுமையான விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நம்பத்தகுந்த தரப்பு தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி சம்பந்தமான கொடூரமான நிலைமை வெளிகொரணப்பட்டுள்ளது.
4 தசாப்த காலமாக நடைபெற்ற கொடூரமான போர் காரணமாக தமது உயிர்களை இழக்க நேர்ந்த அப்பாவி பொது மக்கள் பலரின் கதைகள் செம்மணி மனித புதைகுழியில் இருந்தமை விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
நம்பத்தகுந்த தரப்பு தகவல்களின் அடிப்படையில் செம்மணி தவிர நாட்டில் சுமார் 30 முதல் 40 வரையான மனித புதைக்குழிகள் இருக்கின்றன.
இலங்கையின் மனித புதைகுழிகள் சம்பந்தமான வரலாறு 1971 ஆம் ஆண்டு வரை நீண்டு செல்கிறது.
1971 ஆம் ஆண்டு ஜே.வி.பி மேற்கொண்ட கிளர்ச்சியினை அன்றைய அரசாங்கம் மனிதாபிமானமற்ற வகையில் அடங்கியது.
1971 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட மனித புதைகுழிகள் பற்றிய தகவல்கள் மக்களுக்கு மறைக்கப்பட்டன.
1987 ஆம் முதல் 1990 ஆம் ஆண்டு வரையான காலத்தில் ஏற்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான இளைஞர்களின் புரட்சியின் பலனாக இப்படியான பல மனித புதைகுழிகள் இருப்பதற்கான தகவல்கள் உள்ளன.
வடக்கு, கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகள், 30 வருடங்களாக விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் நடந்த போரில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் அடங்குகின்றன.
இலங்கை அரசின் அரசியல் தலையீடு மற்றும் இராணுவ தலையீடு இன்றி உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்பட்ட மனித புதைகுழி சம்பந்தமான விசாரணைகளில் செம்மணி மனித புதைகுழி தொடர்பான விசாரணையும் ஒன்று.
ஏனைய மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள், அரச மற்றும் இராணுவத்தின் தலையீடு காரணமாக திரிப்படுத்தப்பட்டுள்ளன.
மன்னார் மற்றும் மாத்தளை பிரதேசங்களில் அண்மைய காலத்தில் கண்டறியப்பட்ட மனித புதைகுழி தொடர்பான விடயத்தில் இராணுவம் தலையீடு செய்தமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.
மாத்தளை புதைகுழி தொடர்பான விடயங்களில் அடிப்படையில், குறித்த காலப் பகுதியில் அங்கு பணியாற்றிய இராணுவ அதிகாரியான கோத்தபாய ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. அவர் இன்றைய இலங்கை அரசாங்கத்தின் முக்கியமான பாத்திரத்தை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மனித புதைகுழிகள், கொலைகள் தொடர்பாக நடத்தப்பட்ட பல விசாரணைகள் பகிரங்கப்படுத்தப்படாமலேயே இருக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyFRYLZlx3.html

தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் நிலை! கவனிக்குமா தமிழக அரசு?
[ சனிக்கிழமை, 24 மே 2014, 07:13.51 AM GMT ]
தமிழ்நாட்டில் மேலுார் அருகே அமைந்துள்ள திருவாதவூர் இலங்கை அகதிகள் முகாமில் பராமரிப்பு தொகையான 31 லட்சம் ரூபாய் சரியாக செலவு செய்யப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இம்முகாமில், 500 குடும்பங்களில் 1762 பேர் வசிக்கின்றனர். வீடுகளுக்கு பழுது நீக்கம், கழிவறை, மின் பழுது நீக்கம் செய்தல் போன்ற தேவைகளுக்காக அரசு 30.60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது.
ஆனால், சில வீடுகளில் மட்டுமே பராமரிப்பு பணி நடந்தது. மே 13ல் முகாமை சேர்ந்த 6ம் வகுப்பு முடித்த மாணவி சரண்யா, வீடு இடிந்து விழுந்ததில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகாம் ஆரம்பிக்கப்பட்டு 13 ஆண்டுகளான நிலையில், இதுவரை மின் இணைப்புக்கள் மாற்றப்படாமல் உள்ளன. மராமத்து பணிகள் சரிவர செய்யவில்லை என மறுவாழ்வு ஆணையத்திற்கு முறைப்பாடு அனுப்பியும் நடவடிக்கை இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
முகாமில் வசிக்கும் மகாதேவி இது தொடர்பில் கூறுகையில், 
ஆஸ்பெட்டாஸ் சீட் ஒழுகுவதாக வேலை பார்க்க சொன்னதற்கு வேலை பார்க்கவில்லை. மேலும், வேலை பார்த்ததாக கையெழுத்து கேட்டனர்.
மறுத்து விட்டேன். இதனால், வேலை பார்க்க இறக்கி வைத்திருந்த ஆஸ்பெட்டாஸ் சீட்களை இரவோடு, இரவாக எடுத்துவிட்டு சென்றுவிட்டனர் என்றார்.
மேலும், வள்ளியம்மாள் என்ற பெண் குறிப்பிடுகையில்,
ஆஸ்பெட்டாஸ் சீட் உடைந்து விழும் நிலையில் உள்ளதால், கம்பு ஊன்றி முட்டுகொடுத்துள்ளேன். ஒவ்வொரு நாளும் உயிர் பயத்துடன் வாழ்கிறேன். மேலும் வயிற்றுப் பிழைப்புக்காக, மராமத்து பணிகள் நடந்தபோது கூலி வேலை பார்த்தேன். அதற்குரிய பணம்கூட கொடுக்கவில்லை என்றார்.
இது தொடர்பில் அதிகாரிகள் கூறுகையில், ஒரு வீட்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கியதற்கு தகுந்தாற் போல் சுவர் பூச்சு, வர்ணம் தீட்டுதல் போன்ற வேலைகள் பார்க்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட நிதியை காட்டிலும் கட்டுமான பொருட்களின் விலை அதிகம் என்பதால் யாரும் டெண்டர் எடுக்க முன்வரவில்லை. துறை சார்ந்தவர்களை கொண்டு வேலை பார்த்துள்ளோம் என்றார்.
முகாமில் நடந்து முடிந்த மராமத்து பணிகளை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தால் மட்டுமே, அகதிகளை காப்பாற்ற முடியும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyFRYLZlx2.html

Geen opmerkingen:

Een reactie posten