13வது திருத்தச்சட்டத்தை செயற்படுத்த முனையுமாம் இந்தியா! பாஜக பேச்சாளர் |
| இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 13வது திருத்தத்தை செயற்படுத்த, இந்தியா முனையும் என்று பாரதீய ஜனதாக் கட்சியின் பேச்சாளர் பேச்சாளர் நிர்மலா சித்தாராமன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுடன் தொலைபேசியில் உரையாடிய நிர்மலா சித்தாராமன், இலங்கையுடன் அதிகாரப்பரவலாக்கம், பொருளாதார அபிவிருத்தி மற்றும் கலாசாரம் போன்றவை தொடர்பில் தமது அரசாங்கம், பேசும் என்று குறிப்பிட்டார். மோடியின் பதவியேற்புக்கு இலங்கை ஜனாதிபதியை அழைத்துள்ளதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு வெளியிடப்பட்டமை குறித்து கருத்துரைத்துள்ள அவர், சார்க் நாடுகளின் தலைவர்களை பதவியேற்புக்கு அழைத்த முடிவு, உரியமுறையில் ஆராயப்பட்டே எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். |
| 25 May 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1401022277&archive=&start_from=&ucat=1& |
Geen opmerkingen:
Een reactie posten