dinsdag 1 april 2014

பாலியல் துஸ்பிரயோகம் செய்தவரை அடையாளம் காட்டினார் ஜெர்மனிய யுவதி!


தம்மை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இளைஞரை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், ஜெர்மனிய யுவதி அடையாளம் காட்டியுள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் 4ஆம் திகதிவரை குறித்த இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பம்பலபிட்டியில் உள்ள இரவு கேளிக்கை அகம் ஒன்றில் மது அருந்தியிருந்த போதே தாம் கடந்த மார்ச் 23 ஆம் திகதியன்று பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக முறையிடப்பட்டிருந்தது.
தாம் விழித்தெழுந்த போது ஆடையளின்றி இருந்தமையை உணர்ந்ததாகவும் இதன்போதே தாம் துஸ்பிரயோகத்துக்கு உட்பட்டமை தெரியவந்ததாகவும் பாதிக்கப்பட்ட யுவதி நீதிமன்றில் தெரிவித்தார்.
இதன்போது தம்மை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞரே கல்கிஸ்ஸையில் தாம் தங்கியுள்ள இருப்பிடத்துக்கு கொண்டு சேர்த்ததாகவும் யுவதி குறிப்பிட்டார்.
இந்த யுவதி, கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி கற்கையில் ஈடுபட்டு வருகிறார்.  இவர்,ஏனைய நான்கு ஜெர்மனியர்களுடன் கல்கிஸ்ஸையில் தங்கியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETVLWhu2.html

Geen opmerkingen:

Een reactie posten