சுதந்திரபுரத்தில் 8 பேரை இராணுவம் பிடித்து சென்றது!!
புதுக்குடியிருப்பு உடையார்கட்டின் சுதந்திரபுரத்தினை இராணுவத்தினர் சுற்றிவளைத்து நடத்திய தேடுதலில் எண்மர் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று இரவு முதல் சுதந்திரபுரத்தினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்திய இராணுவத்தினர் இன்று காலை பிரதேசத்திலுள்ள அனைத்து இளைஞர்களையும் பொது இடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்று துருவித் துருவி விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பின்னர் அவர்களிலிருந்து 8 பேரை மேலதிக விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இன்று மாலை 300 அதிகமான இராணுவத்தினர் குறித்த பிரதேசத்தில் குவிக்கப்பட்டு காணப்படுவதால் இன்று இரவும் சோதனை நடவடிக்கைகள் தொடராலாமென அப்பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.பெருமளவிலான முன்னாள் போராளிகளது நிலை அச்சமூட்டுவதாக உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பு கருதி வன்னியிலிருந்து வெளியேற முற்பட்டுள்ளதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/63018.html
மூங்கிலாறு புதைகுழி உண்மை வெழுத்தது!!முல்லைதீவின் புதுக்குடியிருப்பு மூங்கிலாறு பகுதியில் அண்மையில் மீட்டெடுக்கப்பட்ட மனித வன்கூட்டுத் தொகுதிகள் இலங்கை இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களினதென உறுதியாகியுள்ளது. குறித்த மனித வன்கூட்டுத் தொகுதிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் படையினரால் ஏவப்பட்ட எறிகணைகளது துண்டங்கள் கண்டறியப்பட்டுள்ளது. சுமார் பதினொருவரையிலான எறிகணை துண்டங்கள் காணப்பட்டுள்ளதாகவும் அவை அலுமினியம் மற்றும் பித்தளை வகைகளினை கொண்டவையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி திருவையாறு பகுதியினை சேர்ந்த ஒரே குடும்பத்தினை சேர்ந்தவர்களது மனித வன்கூட்டுத்தொகுதிகளது எச்சங்களாக இவை இருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் குடும்பத்தவர்கள் அனைவரும் உயிரிழந்த நிலையில் மனித நேய அமைப்பொன்றினை சேர்ந்தவர்களினால் இவர்களது உடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாகவும் நம்பிக்கையான வட்டாரமொன்று தெரிவிக்கின்றது.
இதனிடையே குறித்த மனித வன்கூட்டுத் தொகுதிகள் விடுதலைப் புலிகளினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களினதெனவும் புலிகளது கட்டுப்பாட்டு பகுதியினிலிருந்து தப்பித்து செல்ல முற்பட்டவேளை சுட்டுக்கொல்லப்பட்டவர்களெனதெனவும் இலங்கை அரசு மேற்கொண்டு வந்த பொய்ப்பிரச்சாரமும் அம்பலமாகியுள்ளது. குறித்த மனித வன்கூட்டுத் தொகுதிகளில் எந்தவொரு துப்பாக்கி ரவைகளினையும் காணவில்லையென குறித்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Geen opmerkingen:
Een reactie posten