தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 augustus 2013

கிழக்கில் கோயில் கொள்ளையை எதிர்த்து த.தே.கூ போராட்டம்! வெலிவேரியவில் நடந்ததுதான் நடக்கும் என இராணுவம் அச்சுறுத்தல்


புல்மோட்டையில் முஸ்லிம் மயானம் படையினரால் சுவீகரிப்பு
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 12:21.06 AM GMT ]
திருகோணமலை புல்மோட்டையில் உள்ள முஸ்லிம் மயானத்தை இலங்கை கடற்படையினர் சுவீகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே புல்மோட்டையில் உள்ள 500 ஏக்கர் காணிää பௌத்த பிக்கு ஒருவருக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது
இந்த காணிப் பகுதியில் பாரிய பௌத்த விஹாரை ஒன்றும், அது சார்ந்த மண்டபங்களும் கட்டப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் முஸ்லிம்களின் மயானத்தை கடற்படையினர் சுவீகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக முஸ்லிம் இனத்தவர் ஒருவர் இருந்த போதும் அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகளை அவரால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் அண்மையில் கிழக்கு மாகாண சபையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்த போதும், எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது
கிழக்கில் கோயில் கொள்ளையை எதிர்த்து த.தே.கூ போராட்டம்! வெலிவேரியவில் நடந்ததுதான் நடக்கும் என இராணுவம் அச்சுறுத்தல்
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 12:13.10 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து ஆலயங்கள் சேதமாக்கப்பட்டமை மற்றும் ஆலயங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாமை ஆகியவற்றை கண்டித்து மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது.
கடந்ந ஜூன் மாதம் முதல் வாரம் ஓரே இரவில் இந்த பிரதேசத்திலுள்ள குருக்கள்மடம் மற்றும் மாங்காடு ஆகிய கிராமங்களிலுள்ள மூன்று இந்து ஆலயங்கள் அடையாளந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டு, இரு ஆலயங்களில் விக்கிரகங்கள் சேதமாக்கப்பட்டு, கொள்ளைகளும் இடம்பெற்றுள்ளன.
குறித்த சம்பவங்கள் இடம்பெற்று இரண்டு மாதங்கள் கடந்து விட்ட போதிலும் சம்பவங்களுடன் தொடர்பான சந்தேக நபர்கள் எவரும் இதுவரை காவல் துறையினரால் அடையாளம் காணப்படவும் இல்லை, கைது செய்யப்படவும் இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது.
சம்பவத்துடன் தொடர்பான சூத்திரதாரிகளை அடையாளம் கண்டு, கைது செய்ய வேண்டும் எனபதே இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் நோக்கம் என்றும் காவல்துறையின் எழுத்து மூல அனுமதி பெறப்பட்டிருந்தாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது.
மாங்காடு பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து குருக்கள்மடம் கதிர்காமப் பிள்ளையார் ஆலயம் வழியாக குருக்கள்மடம் ஐயனார் ஆலயம் வரை, பொது மக்களும் கலந்து கொள்ளும் வகையில் இந்த கவனயீர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அக்கிராம மக்களோ, ஆலய நிர்வாகிகளோ எதிர்பார்த்தவாறு கலந்து கொள்ளவில்லை.
நேற்று மாலை சீருடையிலும் சிவிலுடையிலும் வந்தவர்களினால் இந்த பேரணியில் கலந்து கொள்ளக் கூடாது என அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அறிவிக்கப்பட்டிருந்தாகக் கூறப்படுகின்றது.
இது தொடர்பாக பிபிசியுடன் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, இராணுவ புலனாய்வுத் துறையினரே இந்த அச்சுறுத்தல்களை விடுத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
பேரணி நடைபெறமாட்டாது என்றும் அப்படி நடந்தால் கிராம மக்கள் கலந்து கொள்ள கூடாது என்றும் ஆலய ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்குமாறும் ஆலய நிர்வாகிகள் வற்புறுத்தப்பட்டிருந்தார்கள் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
மாவட்ட இராணுவக் கட்டளை அதிகாரியை தொடர்பு கொண்டு அவரது கவனத்திற்கு இதனை கொண்டுவரவிருந்த போதிலும், அவர் மாவட்டத்திற்கு வெளியே சென்றிருப்பதால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா. அரியநேத்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான கி. துரைராஜசிங்கம், இரா. துரைரெத்தினம், பிரசன்னா இந்திரக்குமார், த. கலையரசன், மு. இராஜேஸ்வரன் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா இராணுவம் மீது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்களை இராணுவத் தரப்பு மறுத்துவிட்டது.

Geen opmerkingen:

Een reactie posten