தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 17 augustus 2013

மங்கள சமரவீரவுக்கு எதிராக அரச புலனாய்வு பிரிவினர் இரகசிய அறிக்கையை தயாரித்துள்ளனர்!

[ சனிக்கிழமை, 17 ஓகஸ்ட் 2013, 09:34.36 AM GMT ]
இலங்கை அரச புலனாய்வு பிரிவான எஸ்.ஐ.எஸ். ஐதேக நாடாளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீரவுக்கு எதிரான இரகசிய அறிக்கையொன்றை தயாரித்து அதனை நேற்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கும் பொலிஸ் மா அதிபர் இலங்ககோனுக்கும் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச புலனாய்வு பிரிவின் தலைவரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரா வாகிஷ்ட இந்த அறிக்கை ஒன்றையும் இரண்டு வீடியோ சீடிக்களையும் நேற்று மதியம் கையளித்துள்ளார்.
மாத்தறையிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தாவிலும் மங்கள சமரவீர ஆற்றிய இரண்டு உரைகள் தொடர்பில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் பொதுநலவாய மாநாட்டைக் குழப்ப அவர் சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை மற்றும் வீடியோ சீடிக்கள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக கோத்தபாய ராஜபக்ச அவற்றை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, பொதுநலவாய நாடுகளின் மாநாடு இலங்கையில் நடைபெறுவதை தடுக்க சதித்திட்டம் தீட்டப் போவதில்லை எனவும் அதனை நேரடியாகவே மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten