தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 15 augustus 2013

கச்சதீவில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்டுவோம்! ஜெயலலிதா நம்பிக்கை!

கொட்டியா சுனில் வெள்ளவத்தையில் கைது- ஆபாச சீடிக்களை வைத்திருந்த பெண் கைது
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 09:13.21 AM GMT ]
போதைப்பொருள் விற்பனை செய்யும் கொட்டியா சுனில் என்பவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
வெள்ளவத்தை, ரொக்சிவத்தையில் வைத்து வைத்து குறித்த நபரைக் கைது செய்யும் போது,அவரிடம் 33 பக்கற்றுகள் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்ந ஜூன் மாதம் கொட்டியா சுனிலின் தங்கையான ரனிஷா ( 28 வயது) என்பருக்கு போதைப் பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஆபாச சீடிக்களை வைத்திருந்த பெண் கைது
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்று அங்கிருந்து நாடு திரும்பிய பெண்ணொருவர் ஆபாச படங்களை அடங்கிய 04 சீடிக்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹபரணை காசிப்பகம பிரதேசத்தில் வசித்து வரும் 25 வயதான இந்த பெண் தமது வீட்டில் பொதுமக்களுக்கு ஆபாச படங்களை திரையிட்டு காட்டுவதாக கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
வீட்டில் இருந்து ஆபாச சீடிக்களை கைப்பற்றிய பொலிஸார், பெண்ணையும் கைதுசெய்துள்ளனர். இந்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கச்சதீவில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்டுவோம்! ஜெயலலிதா நம்பிக்கை!
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 09:09.51 AM GMT ]
கச்சதீவில் நமக்குள்ள உரிமையை நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 67 ஆவது சுதந்திர தினமான இன்று தமிழக தலைமைச் செயலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் அங்கு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தின் சார்பில் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றம் முன்னெடுத்து வைத்தது. தமிழகத்தின் உரிமைகளை நிலை நாட்டும் உன்னதமான சாதனைகளை இந்த அரசு செய்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதே வழியில் கச்சதீவில் நமக்குள்ள உரிமையை நாம் நிலைநாட்டுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten