[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 01:43.53 PM GMT ]
நாட்டின் பிரதான துறைமுகத்துக்குள் பெரிய கப்பல்கள் பிரவேசிப்பதற்கு வசதியாக இந்த விரிவுபடுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்புத் துறைமுக அபிவிருத்தி செயற்திட்டத்தின் முதற்கட்டமான தெற்கு- கொழும்பு முனையத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று திங்கட்கிழமை காலை திறந்து வைத்தார்.
சுமார் 250 கோடி டாலர் மதிப்பிலான இந்த செயற்திட்டத்தின் 85 வீத செலவினத்தை சீன அரசு வழங்கியுள்ளது. மிகுதி 15 வீதத்தை இலங்கை அரசு செலவிட்டுள்ளது.
பெரியளவான கொள்கலன்களை ஏற்றிய கப்பல்கள் தரித்துநிற்பதற்கு வசதியாக இந்த தெற்கு துறைமுக முனையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலும் அண்டை நாடுகளிலும் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக இந்தியாவுக்கு கவலைகள் உள்ள நிலையில், இலங்கையின் மற்றுமொரு துறைமுக செயற்திட்டம் சீனாவின் உதவியில் நடந்துள்ளது.
ஆனால், இந்தத் துறைமுகத்தை இராணுவத் தேவைகளுக்காக வெளிநாட்டுச் சக்திகள் பயன்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது என்று இலங்கை அரசாங்கம் கூறுகின்றது.
கொழும்புத் துறைமுக அபிவிருத்தியின் மூலம் இந்தியத் துணைக் கண்டப் பிராந்தியத்துக்குள் பெருமளவிலான கப்பல் போக்குவரத்துக்களை ஈர்க்க முடியும் என்று இலங்கை அதிகாரிகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாரிய கொள்கலன் களஞ்சியசாலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு!
கொழும்பு தெற்கு துறைமுகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய கொள்கலன் களஞ்சியசாலை மற்றும் இறங்குதுறையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.
இந்த களஞ்சியசாலை சீனாவின் நிதி உதவியுடன் சுமார் 1000 மில்லியன் டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வருடத்துக்கு 2.5 பில்லியன் கொள்கலன்களை ஏற்றி இறக்க முடியும்.
ஆசியாவின் ஆச்சரியமிக்க பயணத்தை நோக்கி செல்லும் இலங்கைக்கு ஒரு பாரிய பலமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது
வெலிவேரியா சம்பவத்தில் தமக்கு தொடர்பில்லை!– பொதுபல சேனா
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 01:26.14 PM GMT ]
அறிக்கை ஒன்றின் மூலம் இந்த மறுப்பை பொதுபலசேனா வெளியிட்டுள்ளது.
தமக்கு அரசாங்கத்தையோ, பாதுகாப்பு அமைச்சையோ, படையினரையோ பாதிக்கச் செய்யும் செயல்களில் ஈடுபடும் திட்டம் இல்லை என்றும் அந்த அமைப்புக் கூறியுள்ளது.
வெலிவேரியாவுக்கு தாமே படையினரை அனுப்பியதாக பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வெளியிட்டதாக கூறப்படும் செய்தி இன்று பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது.
இதனை மறுத்துள்ள பொதுபலசேனா, இந்த செய்தி அரசாங்கத்தையும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் படையினரை உள்ளுர் மற்றும் சர்வதேசத்தில் பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten