தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 augustus 2013

வெலிவேரிய வன்முறை! விளக்கமளிக்க வருமாறு கோத்தபாயவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

திருக்கோவில் காஞ்சிரங்குடா பிரதேசத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்!
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 01:35.41 PM GMT ]
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காஞ்சிரங்குடா பிரதேசத்தில் உள்ள வயலில் மயங்கிய நிலையில் காணப்பட்ட விவசாயி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
திருக்கோவில் மூன்றாம் பிரிவு திருவள்ளுவர் வீதியை சேர்ந்த 04 பிள்ளைகளின் தந்தையான 38 வயதான மரியான்பிள்ளை மரியதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், பிரதேசத்தில் உள்ள விவசாயி ஒருவரின் வயலையும் மாடுகளை பராமரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த மூன்று தினங்களாக அவர் வயலில் தங்கியிருந்து மருந்து தெளித்து வந்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற நேற்றைய தினம் காலை 10.30 அளவில், வயலுக்கு சென்றவர்கள் அவர் மயங்கிய கிடப்பை கண்டு உறவினர்களுக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, திருகோவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கு அருகில் இருந்து கிருமி நாசனி போத்தல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பதை அறியும் பிரேத பரிசோதனைக்காக சடலம் அம்பாறை போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் திருகோவில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

வெலிவேரிய வன்முறை! விளக்கமளிக்க வருமாறு கோத்தபாயவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 11:27.49 AM GMT ]
வெலிவேரிய ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அவரை தவிர பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் உட்பட 25 அரச நிறுவனங்களின் தலைவர்களையும் ஆணைக்குழுவின் முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடி தீர்வொன்றை பரிந்துரைக்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீப மானஹேவா தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten