வெலிவேரிய சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு நடத்தும் விசாரணைகளில் சம்பவத்தில் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் தொடர்பில் விசேட கவனத்தை செலுத்துமாறு இலங்கை ஆசிரியர் சங்கம், மனித உரிமை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சம்பவத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர் எனவும் மேலும் சில மாணவர்கள் காயமடைந்தனர் எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சம்பவத்தில் மாணவர்கள் கொல்லப்பட்டு, காயமடைந்தமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.
அத்துடன் மேற்படி சம்பவம் பற்றிய தகவல்களை வழங்க இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் செயலாளரிடம் கோருகிறோம் என்றார்.
ரத்துபஸ்வல குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை வழங்குமாறு கோரி வெலிவேரிய பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கலைக்கப்பதற்காக படையினர் நடத்திய தாக்குதலில் அகில தினேஷ் என்ற 17 வது மாணவனும், ஷமில ரவிஷான் பெரேரா என்ற 18 வயது மாணவனும் பலியாகினர்.
Geen opmerkingen:
Een reactie posten