[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 04:44.35 AM GMT ]
யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில்,
அடித்தது காயப்படுத்தியது தொடர்பாக 23 பேரும்,
சந்தேகத்தின் பெயரில் நால்வரும்,
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 24 பேரும்,
குடிபோதையில் வாகனத்தை செலுத்தியவர்கள் 12 பேரும்,
சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டவர்கள் 10 பேரும்,
களவு தொடர்பாக நான்கு பேரும்,
மோசடிகள் தொடர்பாக இருவரும்,
குடிபோதையில் கலகம் விளைவித்தவர்கள் ஏழு பேரும்
பொது இடத்தில் மதுவில் கலகம் விளைவித்தவர்கள் ஐவரும்,
திருட்டு மின்சாரம் பெற்றவர்கள் 16 பேரும்,
கொள்ளை தொடர்பாக ஐவரும்,
பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக தலா ஒவ்வொருவரும் அடங்கலாக மொத்தமாக 114 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகத்தின் பெயரில் நால்வரும்,
பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 24 பேரும்,
குடிபோதையில் வாகனத்தை செலுத்தியவர்கள் 12 பேரும்,
சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்டவர்கள் 10 பேரும்,
களவு தொடர்பாக நான்கு பேரும்,
மோசடிகள் தொடர்பாக இருவரும்,
குடிபோதையில் கலகம் விளைவித்தவர்கள் ஏழு பேரும்
பொது இடத்தில் மதுவில் கலகம் விளைவித்தவர்கள் ஐவரும்,
திருட்டு மின்சாரம் பெற்றவர்கள் 16 பேரும்,
கொள்ளை தொடர்பாக ஐவரும்,
பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றங்கள் தொடர்பாக தலா ஒவ்வொருவரும் அடங்கலாக மொத்தமாக 114 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல காங்கேசன் துறைப் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அனுமதிபத்திரம் இல்லாமல் வாகனத்தை செலுத்திய சாரதிகள் இருவரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 24 பேரும், சந்தேகத்தின் பெயரில் 14 பேரும் குடிபோதையில் வாகனத்தைச் செலுத்திய ஒருவரும் ஏனைய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 63 பேரும் அடங்கலாக மொத்தமாக 104 பேர் கடந்த ஒருவார காலத்தில் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவில் 85 கிலோ கஞ்சா மீட்பு
வவுனியா நகரை அண்டிய பகுதியில் இருந்து 85 கிலோ 900 கிராம் நிறைவுடைய கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
இக்கஞ்சாவை வைத்திருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆறு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியாவிலுள்ள விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் கடந்த மாதம் 25 ஆம் திகதி வவுனியா நகரிற்கு வெளியே உள்ள காட்டில் இருந்து விசேட அதிரடிப்படையினரால் இக்கஞ்சா கைப்பற்றப்பட்டது.
இதேவேளை இக்கஞ்சாவை வைத்திருந்தவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யபபட்ட ஆறுபேரும் வவுயியா நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு, எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர் தற்கொலை - பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனயீனமே பாடசாலை திருட்டுக்கு காரணமாகும்
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 05:35.26 AM GMT ]
அவர் அணிந்திருந்த சாரத்தை பயன்படுத்தி கழுத்தில் சுருக்கிட்டு கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்து காணப்பட்டதாகவும் பத்தேகம பொரலுகட பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
தற்கொலை செய்து கொண்ட நபர் மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். அவருக்கு எதிரான கொலை வழக்கொன்றும் காலி மேல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனயீனமே பாடசாலை திருட்டுக்கு காரணமாகும்
கடந்த 21ம் திகதி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குற்பட்ட வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலையில் கணனி திருட்டு போயிருந்தது.
குறித்த பாடசாலையில் பகல் மற்றும் இரவு நேர கவாலாளிகள் மூன்று பேர் கடமைக்காக இருந்த வேளையில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையின் பிரதி அதிபர், பொறுப்பிலிருந்த இவ்வேளையிலே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் பாடசாலை நிருவாகத்தினரால் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கல்வி அலுவலகத்தினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தாக தெரிய வருகிறது.
குறித்த பாடசாலையில் இதற்கு முன்னரும் இவ்வாறான திருட்டு சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பொறுப்புக்காக கடமைக்கு அமைத்தப்பட்டுள்ள அரச, அரச சாரா ஊழியர்களின் கவனயீனமே இதற்கு காரணமென குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten