maandag 12 augustus 2013

தங்காலையில் இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி: மூவர் படுகாயம்- ஜா-எல வாகன விபத்தில் ஒரு பலி !


தங்காலை பொலிஸ் பிரிவின் தங்கெட்டிய சங்கபோ மாவத்தையில் நேற்றிரவு 7.55 அளவில் வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 24 வயதான இளைஞர் கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் இளைஞரின் குடும்பத்தை சேர்ந்த மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த 24 வயதான நுவான் சமீர ஆந்திரஹென்ஹெட்டி என்ற இளைஞர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இறந்தாக தங்காலை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இரண்டு பேர் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 17வயதான இளைஞர் ஒருவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் சட்ட விசாரணைகளை நடத்திய நீதவான் கே.யூ.டி.டி. சில்வா விசாரணைகளை நடத்திய சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஜா-எல வாகன விபத்தில் ஒரு பலி
ஜா-எல ஏக்கல வீதியில் ஜா-எலயில் இருந்து ஏக்கல நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் பாதசாரி மீது மோதியதில் படுகாயமடைந்த பாதசாரி கம்பஹா வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
ஏக்கல் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 65 வயதான நபரே சம்பவத்தில் உயரிழந்துள்ளதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துக்குக் காரணமான நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஜா-எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten