காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் த.மு. தஸநாயக்கவின் சகோதரர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆடிகாமம் பெரியமடு ஆதாஹேன தோட்டம் பகுதியில் வசித்து வந்த 51 வயதான வீரசேன தஸநாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் தோட்டத்தின் பின்புறத்தில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
சடலத்திற்கு அருகில் செல்லிடப் பேசியும் செருப்பு ஜோடியும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தஸநாயக்கவின் மரணம் சம்பவித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. புத்தளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten