dinsdag 6 augustus 2013

வெலிவேரியா சம்பவத்துக்கு படையினரின் மீது குற்றமில்லை! சுட உத்தரவிட்டவர்களே குற்றவாளிகள்!- சரத் பொன்சேகா!


வெலிவேரியா துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு படையினரை குற்றம் சுமத்த முடியாது என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது துப்பாக்கி சூட்டை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டவர்கள் மீதே குற்றம் சுமத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அத்துடன் புதிய இராணுவத்தளபதி, பாதுகாப்பு செயலாளர் உட்பட்டவர்கள் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சில கட்சிகளின் தலைவர்கள் தமது கட்சியை நாசப்படுத்த முனைவதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் அதற்கு இடம்தரப் போவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிலர் அவர்களின் கட்சிகளில் இருக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காகவே அவர்கள் ஜனநாயக கட்சியான தமது கட்சியில் இணைய முற்படுவதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten