தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 augustus 2013

மட்டு. கெவுளியாமடுவில் சிங்கள மக்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டம்


வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வடபகுதி முகாமையாளர் சடலமாக மீட்பு!- வாகன விபத்தில் ஒருவர் பலி
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 09:09.21 AM GMT ]
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வடக்கு மாகாண முகாமையாளர் வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பணியகத்தின் வவுனியா மாவட்ட கிளை அலுவலகத்தில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் கூறினர்.
யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட 50 வயதான எஸ் புருஷோத்தமன் என்ற அதிகாரியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் அலுவலக வளாகத்தில் உள்ள தங்கியிருந்து வந்துள்ளார்.
அவரது சாரதி இன்று அதிகாலையில் அவரை நித்திரையில் இருந்து எழுப்பிய போது, அவர் எழுந்திருக்கவில்லை.
இதனையடுத்து அவர் உயிரிழந்திருந்தமை தெரியவந்துள்ளது.
கல்பிட்டி பாலாவி பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் ஒருவர் பலி
புத்தளம் மாவட்டம் கல்பிட்டி பாலாவி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கெப் வண்டியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய கெப் வண்டியுடன் அதன் சாரதி தப்பிச் சென்றுள்ளார். கல்பிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
மட்டு. கெவுளியாமடுவில் சிங்கள மக்களுக்கான புதிய வீடமைப்புத் திட்டம்
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 09:03.26 AM GMT ]
மட்டக்களப்பு, பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கெவுளியாமடுவில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கான வீடமைப்புத் திட்டம் அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் கடந்த புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
“ஹெலபிம” எனும் அரச சார்பற்ற நிறுவனத்தினாலேயே இந்த வீடமைப்புத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வீடுகளுக்கு அடிக்கல் நடும் அங்குரார்ப்பண நிகழ்வில் மட்டக்களப்பு மங்கள ராமயவின் விகாராதிபதி அம்பிட்டிய சோமரத்ன தேரர், கிழக்கு மாகாண அபிவிருத்தி இணைப்பதிகாரி மேஜர் பேர்ட்டி பெரேரா உட்பட கெவுளியாமடுவில் குடியேறியுள்ள சிங்கள மக்களும் கலந்து கொண்டனர்.
இங்கு வந்து குடியேறி தற்காலிகமாக கொட்டில்களை அமைத்துக் கொண்டுள்ள வறிய குடும்பங்களுக்கு 15 வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் இரண்டாம் கட்ட நிகழ்வு இதுவாகும் என ஹெலபிம அமைப்பின் பிரதிநிதி சுனில் சந்திரகுமார தெரிவித்தார்.
ஆரம்ப தங்குமிட வசதிக்காக அமைத்துக் கொடுக்கப்படும் இந்த வீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா வீடமைப்புக்காக வழங்கப்படுகின்றது.
ஐக்கிய அரபு இராச்சியத்தை தலைமையகமாக கொண்டுள்ள தமது அமைப்பு இருப்பிடமின்றி அல்லற்படும் ஏழைகளுக்கு இன, மத, மொழி வேறுபாடுகளின்றி உதவுவதையே நோக்கமாகக் கொண்டது என சுனில் சந்திரகுமார தெரிவித்தார்.
தமது அமைப்பு ஏற்கெனவே கெவுளியாமடு பிரதேசத்தில் உள்ள வீடற்ற வறியவர்களைக் கொண்ட 16 குடும்பங்களுக்கு ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான 16 வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten