[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 01:34.50 PM GMT ]
காலியில் இருந்து 220 மைல் கடல் தூரத்தில் படகு ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கையில் 88 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
வெலிவேரிய சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சி செய்திருக்கலாம் என நம்பப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் நாளை காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவர் என கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வெலிவேரிய சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்: மனித உரிமை கண்காணிப்பகம்
[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 01:56.37 PM GMT ]
கடந்த 1ம் திகதி வெலிவேரியவில் இடம்பெற்ற போராட்டத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் வெளிப்படையானதும், பக்கச்சார்பற்றதுமான விசாரணைகளை நடத்த வேண்டும்.
சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பிரதேச மக்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். அவர்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனவே பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவோர் அதிகாரத்தையும் ஆயுதங்களையும் பயன்படுத்துவது குறித்த ஐக்கிய நாடுகள் பிரகடனத்திற்கு அமைவாக இலங்கைப் படையினர் வெலிவேரிய சம்பவத்தின் போது செயற்பட்டார்களா என்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten