[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 02:24.15 AM GMT ]
பொலிஸார் நடத்திய விசாரணைகளின் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்திய இராணுவத்தின் ஒரு பகுதியினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடாத்த உத்தரவிட்ட இராணுவ அதிகாரியும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணை அறிக்கையை பொலிஸார் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, போராட்டம் நடத்தப்பட்ட போது யார் இராணுவத்திற்கு அழைப்பு விடுத்தார்கள் என்பது தமக்கு தெரியாது என கம்பஹா உயர் பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் இராணுவத்தினர் தனியான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விக்னேஸ்வரன், பிரபாகரனின் மறு அவதாரமாம்!- சிங்கள எழுத்தாளர் சமில லியனகே
[ புதன்கிழமை, 14 ஓகஸ்ட் 2013, 01:15.44 AM GMT ]
பொதுபலசேனாவின் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
விக்கினேஸ்வரனின் செய்கைகளும் பேச்சுக்களும் திருப்தி தருவதாக இல்லை என்று கூறிப்பிட்ட சமில லியனகே இவரை ஆரம்பத்திலிருந்தே கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புத்த பிக்குகள் ஜனாதிபதியிடம் இது தொடர்பாக கோரிக்கை விடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
2012 கணக்கெடுப்பின்படி இலங்கையில் எட்டு மாவட்டங்களில் பெளத்தர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் வடமேல் மாகாணத்தில் இது அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
சிங்களவர்களை அழிக்க வேண்டுமானால் சிங்களத் தன்மையை இல்லாமற் செய்ய வேண்டும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் பெளத்த பாரம்பரியத்தையும் பழமையையும் ஏனையவருக்கு விற்று வருகின்றனர் எனவும் குற்றம் சுமத்தினார்.
யுத்தத்தை வெற்றி கொள்ள உதவிய நாடு இந்தியா அல்ல என்று தெரிவித்த லியனகே எமது இராணுவ வீரர்களின் முயற்சியே வெற்றி பெற்றுத் தந்தது எனவும் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten