தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 8 augustus 2013

வெலிவேரிய சம்பவம் தொடர்பான தகவல்களை ராஜபக்ச ரெஜிமெண்ட் மூடி மறைத்து வருகிறது!- ஐ.தே.க


மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் செப்டம்பர் 9 ஆம் 10 ஆம் திகதிகளில்...! - தேசிய அடையாள அட்டைகளில் இரண்டு மொழிகளிலும் விபரங்கள் உள்ளடக்கப்படும்
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 11:02.42 AM GMT ]
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தபால் மூல வாக்களிப்புகள் செப்டம்பர் 9 ஆம் 10 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அரசாங்க ஊழியர்கள் இந்த தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு உட்பட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறவுள்ளது.
தேசிய அடையாள அட்டைகளில் இரண்டு மொழிகளிலும் விபரங்கள் உள்ளடக்கப்படும்: சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் உறுதி
எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் தமிழ், சிங்களம் ஆகிய இரண்டு மொழிகளிலும் விபரங்கள் அடங்கிய தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று சட்டமா அதிபர் இன்று உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.
தற்பொழுது, சிங்கள பிரஜைகளுக்கு வழங்கப்படும் தேசிய அடையாள அட்டைகளில் சகல விபரங்களும் சிங்களத்தில் மாத்திரம் எழுதப்பட்டிருப்பதுடன், தமிழ் மற்றும் முஸ்லிம் பிரஜைகளுக்கு வழங்கும் அடையாள அட்டைகளில் இரண்டு மொழிகளிலும் விபரங்கள் எழுதப்பட்டு வந்தது.
இந்த நிலையில், வடக்கு , கிழக்கு மாகாணங்களில் நிர்வாக பணிகள் தமிழ் மொழியில் மேற்கொள்ளப்பட்டு வருவதால், அங்கு செல்லும் சிங்களவர்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் வழங்கப்படும் சகல தேசிய அடையாள அட்டைகளிலும் இரண்டு மொழிகளிலும் விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் எனக் கோரி சிங்களவர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே சட்டமா அதிபர் இந்த வாக்குறுதியை வழங்கியுள்ளார்.
இதனிடையே இலத்திரனியல் அடையாள அட்டைகளை விநியோகிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஆட்பதித் திணைக்களம் அறிவித்துள்ளது.
அடுத்த இரண்டு வருடங்களில் இந்த அடையாள அட்டைகளை வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிவேரிய சம்பவம் தொடர்பான தகவல்களை ராஜபக்ச ரெஜிமெண்ட் மூடி மறைத்து வருகிறது!- ஐ.தே.க
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 10:56.11 AM GMT ]
வெலிவேரிய பிரதேசத்தில் அண்மையில், சில உயிர்களை காவு கொண்ட சம்பவத்தை ராஜபக்ச ரெஜிமெண்ட் மூடி மறைத்து வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அத்தநாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ரத்துபஸ்வல ஜன சங்காரத்தில் இராணுவ கமாண்டோ படையணிக்கு மேலதிகமாக பிரதேச அரசியல்வாதி ஒருவரின் வன்முறை குழுவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குடிப்பதற்கு குடிநீர் கேட்ட ரத்துபஸ்வல பிரதேசத்தை சேர்ந்த நிராயுத பணிகளான மக்கள் மீது இராணுவத்தினரையும் வன்முறை குண்டர்களையும் பயன்படுத்தி, இரும்பு கம்பிகள் மற்றும் துப்பாக்கிகளினால் தாக்கி பல பெறுமதியான உயிர்களை காவு கொண்ட குற்றம் தொடர்பிலான தகவல்களை மறைக்கும் நடவடிக்கையில் ராஜபக்ச ரெஜிமெண்ட் ஈடுபட்டு்ளளதாக நம்பிக்கைக்குரிய தரப்புகளிடம் இருந்து ஐ.தே.கட்சிக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.
உண்மையை மறைக்கும் இந்த வெட்கமற்ற முயற்சிக்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
அப்பாவி மக்களை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும் கருவிகளையும் விசாரணைகளுக்காக வழங்கவில்லை. அந்த தகவல்களை ராஜபக்ச அரசாங்கம் மறைத்து வருகிறது.
இதனால் ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்படங்களை கொண்டு இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் காண உதவுமாறு ஐக்கிய தேசியக்கட்சி பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றது.
இந்த மனிதாபிமானமற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பான சகல தகவல்களையும் வழங்குமாறும், அவ்வாறு தகவல்களை வழங்கும் நபர்களின் விபரங்கள் இரகசியமாக வைக்கப்பட்டு பாதுகாக்கப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் அத்தநாயக்க கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten