maandag 12 augustus 2013

தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் மீது நம்பிக்கையில்லை: ஐ.தே.க - வாக்காளர் அட்டைகளை அச்சிடுவது தொடர்பில் வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்த வேணடும்: பெப்ரல் கோரிக்கை !

தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. 
கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக தேர்தல்கள் நடைபெறும் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இவ்விரண்டு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தல்களிலும் கண்காணிப்பு குழுக்கள் செயற்பட்டிருந்தன.
ஆனால் அரசாங்கம் மேற்கொண்டிருந்த மோசடிகள் தடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த முறை நடைபெறும் தேர்தலின் போது, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தங்களின் உறுப்பினர்கள் நிறுத்தப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் மிரட்டப்பட்டு, வாக்களிக்கவிடாமல் செய்யும் சில அரச தரப்பு ஆதரவாளர்களையும் அடையாளம் காண முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்காளர் அட்டைகளை அச்சிடுவது தொடர்பில் வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்த வேணடும்: பெப்ரல் கோரிக்கை
இம்முறை மாகாண சபை தேர்தலுக்கான அச்சிடப்படும் வாக்காளர் அட்டைகள் தொடர்பில் வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்துமாறு தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பெப்ரல் அமைப்பு அரச அச்சக அதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடிதம் ஒன்றை அச்சக அதிபதிக்கு அனுப்பியுள்ள இந்த அமைப்பு கோரிக்கையை விடுத்துள்ளது.
உரிய பாதுகாப்பு வேலைத்திட்டம் இன்றி வாக்காளர் அட்டைகள் அச்சிடுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசப்பட்டுள்ளதால், இந்த கோரிக்கை தாம் விடுத்துள்ளதாக பெப்ரல் அமைப்பு கூறியுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten