விடுதலைப் புலிகளுடன் வன்னியில் சமாதான விருந்துகளை நடத்தி நாட்டை இரண்டாக பிரிக்க தருணம் பார்த்திருந்த ரவூப் ஹக்கீம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரிடம் பிரிவினைவாதத்திற்கு சேவகம் செய்யும் கருத்துக்களை முன்வைத்தாலும் அது ஆச்சரியமானதல்ல என்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்தார்.
கண்டியில் நடைபெற்ற தேர்தல் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வே. பிரபாகரனுடன் இணைந்து நாட்டை பிரிக்கும் பொறியை அன்று பொருத்திய ஹக்கீம், இன்று அரசாங்கத்தில் இருந்து கொண்டு விடுதலைப் புலிகளின் கைப்பாவையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தேவையான வகையில் செயற்பட்டு வருகிறார்.
வடக்கு மாகாண முஸ்லிம்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிராக அரசாங்கத்திற்கு வாக்களிப்பதை தடுக்கும் நோக்கத்தில் ஹக்கீம், அந்த மாகாணத்தில் தனித்து போட்டியிட முடிவு செய்தார்.
வரலாறு முழுவதும் ஹக்கீம் பிரிவினைவாதத்திற்கு சேவகம் செய்பவர் என்பதை ஒப்புவித்துள்ளார் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten