donderdag 15 augustus 2013

நவநீதம்பிள்ளையை கோத்தபாய சந்தித்து பேசுவார்!- ஜகத் ஜெயசூரிய

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சந்தித்து பேச்சு நடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை பிரதம பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது நாட்டின் பாதுகாப்பு நிலமை மற்றும் பொறுப்புக்கூறல் போன்ற விடயங்கள் தொடர்பில் நவநீதம்பிள்ளைக்கு பாதுகாப்பு செயலாளர் தெளிவுபடுத்துவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டிற்கு முன்னர் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளை புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவற்றை முறியடிப்பதற்கு நாம் செயற்பட வேண்டும். இது தொடர்பில் எம்மிடம் தகவல்கள் உள்ளன என அவர் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள அரச தலைவர்களுக்கு அவர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர் என ஜெனரல் ஜகத் ஜெயசூரிய மேலும் குறிப்பிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten