[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 05:44.18 AM GMT ]
களனி பிரதேசத்தில் சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகள் அமைச்சர் மேர்வின் சில்வாவினாலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதாக களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர உட்பட உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வரலாற்று சிறப்புமிக்க மன்னார் மடு மாதா தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களனி மக்கள் அமைச்சர் மேர்வின் சில்வாவை நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளனர்.
அதேவேளை அடுத்த சில தினங்களில் வேண்டுமானாலும் விருப்பு வாக்கு தேர்தல் ஒன்றை நடத்தி களனி மக்களின் விருப்பு வாக்குகளை பெற்றுக் கொள்வதாகவும் களனி மக்கள் தன்னை நிராகரித்தால், கட்டாயம் அரசியலில் இருந்து ஒதுங்கி விடப் போவதாகவும் மண்டியிட்டு வாழ தான் ஒருபோதும் எண்ணவில்லை எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா அண்மையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், நேற்றைய தினம் களனி பிரதேசத்தில் திருடப்பட்ட மாடுகளை விற்பனை செய்யும் வர்த்தகம் நடந்து வருவதாக அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலர் வழங்கிய தகவல்களை அடுத்து, பொலிஸார் சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை நடத்தினர்.
இதேவேளை, களனி பிரதேசத்தில் மாடுகள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட போது, பிரதேச மக்கள் தலையிட்டு, அதனை பொலிஸாருக்கு அறிவித்து, தடுத்து நிறுத்தியுள்ளனர் எனவும் தடுத்து நிறுத்தப்பட்ட விடயத்துடன் அமைச்சருக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் பிரதேச சபை உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
களனி பிரதேசத்தில் மாட்டிறைச்சியை தடை செய்தது அமைச்சர் மேர்வின் சில்வா அல்ல எனவும், பிரதேச சபையே அதனை தடை செய்ததாகவும் சம்பவ இடத்திற்கு சென்ற களனி பிரதேச சபையின் தலைவர் பிரசன்ன ரணவீர உட்பட சில உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
களனி பிரதேசத்தில் நடைபெறும் சகல பணிகளும் களனி பிரதேச சபைக்கு தேவையான வகையில் நடைபெறுவதாகவும், அமைச்சர் மேர்வின் சில்வாவின் தேவைக்கு அமைய அந்த பணிகள் நடைபெறுவதில்லை எனவும் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.
மடு மாதா தேவாலயத்தின் திருவிழாவை முன்னிட்டு பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 06:11.58 AM GMT ]
மடு மாதா திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து மடுவுக்கு செல்கின்றனர்.
இவர்களின் பாதுகாப்புக்காக விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் 15ம் திகதி நடைபெறும் மடு திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வரும் பக்தர்களும், அவர்களை அழைத்து வரும் வாகன சாரதிகளும் பொலிஸாரின் நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மது அருந்தி விட்டு, வாகனத்தை செலுத்தக் கூடாது, தேவைக்கு அதிகமான பயணிகளையோ, பொருட்களையோ, வாகனங்களில் ஏற்றிச் செல்லக் கூடாது என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன் பழுதடைந்த வாகனங்களை பயன்படுத்தக் கூடாது, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
Geen opmerkingen:
Een reactie posten