முப்படையைச் சேர்ந்தவர்களே இன்று அதிகளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டில் இடம்பெற்று வரும் கொள்ளை உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் அதிகளவில் பொலிஸாரும் படையினருமே தொடர்புபட்டிருக்கின்றனர்.
கொள்ளைக் கூட்டத்தில் முப்படையைச் சேர்ந்த ஒருவரேனும் இருக்கின்றார். கொலை செய்தால் தூதுவர் பதவி கிடைக்கும் என அவர்களுக்குத் தெரியும்.
குடிக்க சுத்தமான நீரைக் கேட்டால் அரசாங்கம் அவர்களை தேசத்துரோகிகள் என்கிறது. குற்றவாளிகளே இன்று உயர் பதவிகளை வகிக்கின்றனர்.
எங்களது கடவுச் சீட்டில் ஜனநாயகக் குடியரசு என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை இன்று நாட்டில் இருக்கின்றதா?
குடிநீர் கேட்டவர்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
இந்த சகல படுகொலைகளுக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெலிவேரியவில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிடப்பட்டது – ஜே.வி.பி.
திட்டமிட்ட வகையிலேயே வெலிவேரியவில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
இராணுவத்தினர் முதலில் ஊடகவியலாளர்களையே தாக்கினார்கள் என ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த காட்சிகளை மக்கள் பார்க்க்க் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த அரசாங்கம் தனக்கு விருப்பமானவரே சட்டத்தை அமுல்படுத்துகின்றது.
தான் நினைத்தனை மட்டும் செய்யும் அரசாங்கத்தை இராணுவ ஆட்சியாக அடையாளப்படுத்துவதில் என்ன தவறு?
மூன்றாம் தரப்பினர் இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
அவ்வாறு என்றால் ஏன் பாடசாலை மாணவர்கள மீது படையினர் தாக்குதல் நடத்தினார்கள் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆன்மீக ஆடையணிந்து கொலை செய்யும் அரசாங்கமாகவே இந்த அரசாங்கம் திகழ்கின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten