தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 17 augustus 2013

வெலிவேரிய சம்பவம் தொடர்பான மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

வெலிவேரிய ரத்துபஸ்வல இராணுவ தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தற்காலிகமாக இடைநிறுத்த இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் ரத்துபஸ்வல சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கும் இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் முடிவு அறிவிக்கப்படும் வரை விசாரணைகளை இடைநிறுத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் முடிவு அறிவிக்கப்படும் வரை விசாரணைகளை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதியின் தீர்மானம் அறிவிக்கப்பட்ட பிறகு, பிரதேச மக்கள், மதகுருமார் மற்றும் இராணுவத்தினரை அழைத்து விசாரணை நடத்த எண்ணியுள்ளதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் பிரியந்த பெரேரா தெரிவித்தார்.
ஆணைக்குழுவின் இந்த முடியு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அரசியல் அவதானிகள், மனித உரிமைகள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளின் முடிவுகள் வெளி தரப்பினரின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்ற நிலையில், விசாரணைகளை நடத்தும் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மை பற்றிய கேள்வியை எழுப்பியுள்ளது.
இது சம்பவம் தொடர்பாக ஆணைக்குழு நடத்தும் விசாரணைகளின் முடிவுகள் தொடர்பிலும் பாரதூரமான சந்தேகம் ஏற்படும்.
மனித உரிமை மீறப்பட்டதா இல்லையா என்பதை தெரிவிக்க ஜனாதிபதியின் முடிவு வரும் வரை காத்திருப்பது நகைப்புக்குரிய நிலைமை என அவர்கள் கூறியுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten