maandag 5 augustus 2013

இத்தாலியில் இலங்கை பிரஜை ஒருவர் கொலை

வடக்கு மீனவர்கள் மீது தேசிய சுதந்திர முன்னணிக்கு ஏற்பட்டுள்ள புதிய பாசம்- இந்திய மீனவர்கள் பிரச்சினையில் பிரதமர் சிறந்த முடிவை எடுப்பார்
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 11:42.29 AM GMT ]
தென்னிந்திய அரசியல்வாதிகளின் முழுமையான அனுசரணையுடன் நடைபெறும் இந்திய மீன்பிடி மாஃபியா காரணமாக வடக்கில் உள்ள மீனவ குடும்பங்கள் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் தொடர்ந்தும் அமைதியாக இருக்காது, இந்த நியாயமற்ற செயற்பாட்டுக்கு எதிராக குரல் கொடுக்குமாறு, தேசிய சுதந்திர முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு சவால் விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் இந்த சவாலை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
போரில் இருந்து விடுவிக்கப்பட்ட இந்த நாட்டு மீனவ மக்கள் மற்றுமொரு யுத்தத்திற்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தமது மீன் வளங்களை கொள்ளையிட்டு வரும், ஜெயலலிதா - கருணாநிதியின் அணுசரனை பெறும் தென்னிந்திய மீன்பிடி மாஃபியாவுடன் இந்த போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது.
மன்னார், பருத்தித்துறை முதல் முல்லைத்தீவு வரை மீன்பிடியில் ஈடுபடும் வடபகுதியை சேர்ந்த தமிழ் மீனவர்களுக்கே இந்த நிலைமை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவ மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருவதாகவும் முஸ்ஸாமில் தெரிவித்தார்.
இந்திய மீனவர்கள் பிரச்சினையில் பிரதமர் சிறந்த முடிவை எடுப்பார்- ஜெயந்தி நடராஜன்
இந்திய மீனவர்கள் பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங் நல்ல முடிவு எடுப்பார் இந்திய மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் தெரிவித்தார்.
மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், நேற்று டெல்லி சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்படுவதை தடுக்க பிரதமர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இந்த பிரச்சினையில் நிரந்தர தீர்வுகாண பிரதமர், வெளியுறவு துறை மூலம் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டுள்ளார். மீனவர்கள் பிரச்சினையில் பிரதமர் நல்ல முடிவு எடுப்பார்.

இத்தாலியில் இலங்கை பிரஜை ஒருவர் கொலை
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 12:25.55 PM GMT ]
இத்தாலியின் சென்ட் ஒமேரோ பகுதியில் இரண்டு இலங்கை பிரஜைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இத்தாலிய பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 30 வயதான கெலும் நாணயக்கார என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக இத்தாலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 29 வயதான கே.பி. உதார சந்திம என்ற இலங்கை பிரஜை கத்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அயல் வீடுகளில் வசித்து வந்த இவர்கள் மதுபானம் அருந்தியிருக்கலாம் எனவும் இதன் பின்னர் இவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சினையில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் கொல்லப்பட்ட நபர் இத்தாலிய நிறுவனம் ஒன்றில் சிற்றூழியராக பணியாற்ற வந்தவர் எனவும் அவர் ஒரு பிள்ளை தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten