woensdag 14 augustus 2013

பிரிட்டனில் கிரிக்கெட் மைதானத்தில் புலிக்கொடியுடன் ஓடியவரை சர்வதேச பொலிஸ் தேடுகிறது! புலனாய்வு பிரிவினர் !

பிரித்தானியாவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை, மான்செஸ்டர் பொலிஸின் சர்வதேச குற்றச்செயல் கிளை தேடி வருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவானிடம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
சந்தேகநபரான லோகேஸ்வர்ன மணிமாறன் இன்னும் கைது செய்யப்படாது மறைந்து வாழ்வதால் விசாரணையை முடிக்க முடியவில்லை.
ஆகையால், ஏற்கெனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களான குலதீபன் மற்றும் உதயனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதியளிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் அனுமதி கோரினர்.
இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, புலிக்கொடியுடன் ஓடியவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய ஜூலை மாதம் 30ம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
யசோதர சடாச்சரமூர்த்தி எனும் பெயரில் 2000ம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டையே பறிமுதல் செய்யுமாறு நீதவான் கடந்த 30ம் திகதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கை ஓகஸ்ட் 13ம் திகதி (நேற்று) வரையிலும் நீதவான் ஒத்திவைத்தார்.

சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஜுன் மாதம் 20ம் திகதி பிரித்தானியா, கார்டிப் நகர மைதானத்தில் நடைபெற்ற போது மைதானத்திற்குள் புலிக்கொடியுடன் ஓடியவரையே கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்ட திறந்த பிடியாணையை ஜுலை 3ம் திகதி புதன்கிழமை பிறப்பித்தார்.
இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வருகை தந்தால் கைது செய்யுமாறு ஜுன் 15ம் திகதி திங்கட்கிழமை உத்தரவிட்ட நீதவான் சிவப்பு அறிவிப்பு விடுத்துள்ளார்.
புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடி குழப்பம் விளைவித்த லோகேஸ்வரின் மணிமாறன் என்பவருக்கே இவ்வாறு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிரான வழக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

Geen opmerkingen:

Een reactie posten