கம்பஹா மாவட்டம் ரத்துபஸ்வல பகுதியில் உள்ள கிணறுகளில், ஒருவகை இரசாயணப் பொருள் கலப்பதாக மக்கள் கூறிவருகிறார்கள். இதனால் பலர் பாதிப்புக்கு உள்ளாகிவருகிறார்கள். இதனையடுத்து நேற்றைய தினம் சுமார் 4,000 சிங்களவர்கள் கூடி அமைதியான ஆர்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். ஆனால் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிசார் முயற்சிசெய்துள்ளார்கள். அவர்கள் முதலில் கண்ணீர் புகைக்குண்டுகளை மக்கள் மேல் ஏவியுள்ளார்கள். அதனை எடுத்து ஆர்பாட்டக்காரர்கள் பொலிசாருக்கே திருப்பி எறிந்திருக்கிறார்கள். இதனையடுத்து அங்கே வந்த இராணுவத்தினர், மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்கள். இக் காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஈவு இரக்கம் இன்றி தமது சொந்த மக்கள்(அதாவது சிங்களவர்கள் மேல்) இலங்கை இராணுவம் இவ்வாறு தாக்கியுள்ளது.
அப்படி என்றால் தமிழர்களின் நிலை எப்படி இருக்கும் என்று அனைவரும் யோசித்துப் பார்க்கவேண்டும் அல்லவா ? 1.26 நிமிட இந்த வீடியோவை இறுதிவரை பாருங்கள். அங்கே நடந்த நிகழ்வுகள் வெளிச்சத்துக்கு வரும்.
Geen opmerkingen:
Een reactie posten