இதனால் "கொட்டியா" "கொட்டியா" அதாவது புலிகள் புலிகள் என்று கத்திக்கொண்டு பயந்தடித்துச் சிங்களவர்கள் வெளியே ஓடிவந்துள்ளார்கள். அவர்கள் கூடியிருந்த கட்டிடத்திற்கு வெளியே உள்ள சுவரில் கைக்குண்டின் சன்னங்கள் தெறித்த காயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. உடனடியாக பெருமளவான இராணுவத்தினரும் பொலிசாரும் அங்கே வரவளைக்கப்பட்டு, அவ்விடத்தை இராணுவம் சுற்றிவளைத்துள்ளது என்றும் அங்கிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. நவற்குழி மற்றும் செம்மணிச் சுடலை, அரியாலை போன்ற பகுதிகளை இலங்கை இராணுவம் சுற்றிவளைத்து தேடுதல் நடத்திவருவதாக பிரதேசவாசிகள் சிலர் அதிர்வு இணையத்துக்கு தெரிவித்துள்ளார்கள்.
இக் குண்டுவெடிப்பு காரணமாக அவ்விடத்தில் உள்ள சில தமிழர்களை சிங்களவர்கள் இராணுவத்துடன் இணைந்து தாக்கியுள்ளதாகவும் ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிகள் செய்திகள் நாளை காலை வெளியாகும். இது தொடர்பான சில வீடியோ மற்றும் புகைப்படங்கள் மிக விரைவில் வெளியாக உள்ளது. எனவே அதுவரை அதிர்வு இணையத்தோடு இணைந்திருங்கள்.
Geen opmerkingen:
Een reactie posten