தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 augustus 2013

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கருணாநிதி கண்டன ஆர்ப்பாட்டம்

இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 02:26.16 AM GMT ]
இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.  எச்.ஐ.வீ நோய்த் தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 45000 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த ஆண்டில் எயிட்ஸ் நோய்த்தொற்று பரவிய குழந்தைகளின் எண்ணிக்கை 64 என சுகாதார அமைச்சின் பால் நோய் மற்றும் எயிட்ஸ் நோய்த் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
எயிட்ஸ் நோய்த் தொற்று பரவியமை தொடர்பில் அறியாமலேயே பலர் இருக்கின்றனர்.
மருத்துவ பரிசோதனைகளின் மூலம் நோயாளியைக் கண்டு பிடிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களை விடவும் இந்த ஆண்டில் அதிகளவான எயிட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கருணாநிதி கண்டன ஆர்ப்பாட்டம்
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 08:15.42 AM GMT ]
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் நாளை டெசோ அமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றல், கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது, தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்தைத் தடுத்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை வள்ளூவர் கோட்டம் அருகில் நாளை காலை 9.30 மணிக்கு நடை பெறும் ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தவுள்ளார்.
மேலும், தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ., வடசென்னை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் முன்னிலை வகிப்பதுடன், பேராசிரியர் சுபவீர பாண்டியன் உள்பட பலர்  உரையாற்றவுள்ளனர்.
தென் சென்னை மாவட்ட சென்னை மாவட்டம் சார்பில் நடைபெறும் இந்த போராட்டத்தில் ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்க உள்ளனர்.
இதேவேளை, காஞ்சீபுரத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அன்பரசன் தலைமை தாங்குகிறார். முன்னாள் அமைச்சர் துரைமுருகன் சிறப்புரையாற்றுகிறார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Geen opmerkingen:

Een reactie posten