ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் நியமனக் கடிதங்களை கையளித்த வெளிநாடுகளின் பல தூதுவர்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கு தமது நாடுகள் பூரண ஒத்துழைப்புகளை வழங்கும் என தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருப்பதாகவும் இலங்கைக்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த மாநாட்டில் தமது நாடு கலந்து கொள்ளும் எனவும் இலங்கைக்கான போஸ்வான நாட்டின் உயர்ஸ்தானிகர் லேசோகோ எதேல் மொத்சூம் தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்க நாடுகளை சேர்ந்த 5 உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவரும் ஒருவரும் கடந்த 12 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர்.
பொஸ்வானா, ருவாண்டா, பேனின், மொரிசியஸ் உட்பட 06 நாடுகளின் தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten