தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 6 augustus 2013

வீண்பேச்சுக்களை பேசும் மகிந்த அரசு மிகவும் கொடூரமானது- மூழ்கும் கப்பலில் ஏறிய தயாசிறி ஜயசேகர துரதிஷ்டசாலி: ஐ.தே.க


போர் காரணமாக அபிவிருத்தி தியாகம் செய்யப்பட்டது!
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 01:35.56 PM GMT ]
விடுதலைப் புலிகளுடனான போர் காரணமாக கடந்த கால அரசாங்கங்கள் அபிவிருத்திகளை தியாகம் செய்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சுமார் 500 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டில் கொழும்பு துறைமுகத்தின் தெற்கு இறங்குத்துறை இன்று திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி போர் காரணமாக இலங்கையின் அபிவிருத்தி பின்னடைந்த நேரத்தில் பிராந்தியத்தின் ஏனைய நாடுகள் அபிவிருத்தியில் முன்னேறிச் சென்றன என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வீண்பேச்சுக்களை பேசும் மகிந்த அரசு மிகவும் கொடூரமானது- மூழ்கும் கப்பலில் ஏறிய தயாசிறி ஜயசேகர துரதிஷ்டசாலி: ஐ.தே.க
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 12:37.42 PM GMT ]
இரக்கம் எனக் கூறி, வீண் பேச்சுக்களை பேசி வரும் அரசாங்கம் மிகவும் கொடூரமான அரசாங்கம் என்பது தெரியவந்துள்ளது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
வெலிவேரியவில் ஏற்பட்ட சம்பவத்தின் போது, வயதானவர்களா அல்லது கர்ப்பிணி பெண்களான என்பதை கூட அறியாது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஓய்வூதிய போராட்டத்தில் கட்டுநாயக்கவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ரொஷான் சானக்க என்ற இளைஞர் கொலை செய்யப்பட்டார். இரக்கமுள்ள அரசாங்கம், துப்பாக்கி வேட்டுக்களாலும் நீர் தாரை தாக்குதல்களாலுமே மக்களுக்கு பதிலளித்து வருகிறது.
ரத்துபஸ்வல மக்கள் குடிநீரை கேட்டு வீதியில் இறங்கி போராடினர். அந்த சந்தர்ப்பத்தில் மக்களை கொலை செய்யப்பட்ட பின்னர், அதில் மூன்றாம், தரப்பு நான்காம் தரப்பு சம்பந்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கதைகளை கூறுகிறது.
இதன் மூலம் அரசாங்கத்தின் இயலாமையும் மிலேச்சத்தனமும் தெரிகிறது.
நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுமே பதிலளித்து வருகின்றனர். இது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் இயலாமையை காட்டுகிறது.
இதற்கு சிறந்த உதாரணம், பிரதேச சபை ஒன்று தீர்க்க வேண்டிய பிரச்சினையில் இராணுவம் தலையிட்டதாகும்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எதிர்காலத்தில் கட்டாயமாக ஒரு குழுவை நியமிக்கும். இந்த குழுக்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக்கட்சிக்கோ, ரத்துபஸ்வல மக்களுக்கோ எந்த நம்பிக்கையுமில்லை.
இந்த விடயம் சம்பந்தமாக மக்கள் தேர்தலில் உரிய பதிலை வழங்க வேண்டும். முக்கியமாக இந்த அரசாஙகத்தின் நாசிஸவாதத்தை தடுக்க மக்கள் முன்னோக்கி வரவேண்டும் என்றார்.
மூழ்கும் கப்பலில் ஏறிய தயாசிறி ஜயசேகர துரதிஷ்டசாலி- திஸ்ஸ அத்தநாயக்க
தயாசிறி ஜயசேகர என்பவர் அதிஷ்டசாலி என்பதை விட துரதிஷ்டசாலி என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
குருணாகலில் நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தயாசிறி ஜயசேகர ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருக்கும் போது, உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அதிகளவான விருப்பு வாக்குகளை பெற்றார். ஆனால் அவருக்கு பண்டுவஸ்நுவர பிரதேச சபை தலைவராகவோ, உப தலைவராகவோ வர முடியாமல் போனது.
தொலைக்காட்சியில் நடைபெற்ற மெகா ஸ்டார் போட்டியில் அவர் முதலிடத்தை பெறுவார் என முழு நாடு எதிர்பார்த்தது. ஆனால் அதுவும் அவருக்கு கிடைக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு போட்டியிட்டார். அதிலும் அவர் தோல்வியடைந்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் அதிக விருப்புகளை அவர் பெற்றார், ஆனால் அது பற்றி நான் எதனையும் கூறப்போவதில்லை. தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
தயாசிறி ஜயசேகரவைவிட அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மகன் அதிகமான விருப்பு வாக்குகளை பெறுவார் என அரச சோதிடரான சுமணதாச அபேகுணவர்தன எதிர்வு கூறியுள்ளார்.
இதன் மூலம் தயாசிறி ஜயசேகர எவ்வளவு துரதிஷ்டசாலி என்பது தெளிவாகியுள்ளது. மூழ்கும் கப்பலில் எவரும் ஏறமாட்டார்கள் என்பதால், தயாசிறி ஜயசேகர தனது ஜாதகத்தை பார்த்து கொள்ளுமாறு அவருக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன் என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten