vrijdag 9 augustus 2013

இலங்கையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு எரிகல் பொழிவு! தெளிவாக காணும் வாய்ப்பு!


இலங்கையின் நான்கு துறைமுகங்கள் சுதந்திர வர்த்தக துறைமுகங்களாக அறிவிப்பு
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 09:10.22 AM GMT ]
கொழும்பு, அம்பாந்தோட்டை, திருகோணமலை, காலி ஆகிய துறைமுகங்கள் சுதந்திர வர்த்தக துறைமுகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு மூலப் பொருட்களை இறக்குமதி செய்து உற்பத்தியில் ஈடுபடும் ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
2012 இலக்கம் 12 என்ற நிதி சட்டமூலத்தின் அடிப்படையில், இந்த துறைமுகங்கள் சுதந்திர வர்த்தக துறைமுகங்களாக பெயரிடப்பட்டுள்ளன.
இலங்கையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு எரிகல் பொழிவு! தெளிவாக காணும் வாய்ப்பு!
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 09:16.16 AM GMT ]
நாளை 10ம் திகதி சனிக்கிழமை தொடக்கம் எதிர்வரும் 13ம் திகதி செவ்வாய்க்கிழமை வரையான 3 நாட்களுக்கு இலங்கையில் இடம்பெறவுள்ள எரிகல் பொழிவை தெளிவாக காணும் வாய்ப்பு மக்களுக்கு கிடைக்கவுள்ளது.
நாளைய தினம் மணித்தியாலத்திற்கு 15 எரிகற்களை காண முடியும் எனவும், அடுத்து வரும் நாட்களில் அது 50 ஆக அதிகரிக்கக் கூடும் எனவும் இலங்கை கோள் மண்டலம் தெரிவித்துள்ளது.
பிரகாசத்துடன் பொழியும் எரிகற்களை கண்களால் தெளிவாக காண முடியும் என கோள் மண்டலம் குறிப்பிட்டுள்ளது.
மேகமூட்டமற்ற காலநிலை காணப்படுமாயின், நள்ளிரவு தொடக்கம் அதிகாலை வரை வானத்தின் ஈசான திசை பகுதியில் எரிகல் பொழிவை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten