தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 15 augustus 2013

இராணுவத்தின் பொறுப்புணர்ச்சி குறித்து ரோசி சேனாநாயக்க கேள்வி

தேர்தலில் வாக்களிக்காதமையினால் அம்பாறை மாவட்ட தமிழ் கிராமங்கள் அபிவிருத்திகளில் புறக்கணிப்பு! - கஞ்சா வைத்திருந்தவர்களுக்கு அபராதம்
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 02:39.41 AM GMT ]
அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்திகளில் இருந்து புறக்கணிப்பபடுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அம்பாறையில் பாரிய அளவில் அரசாங்க மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கறைப்பற்று, கல்முனை தமிழ் பிரதேசம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள மக்கள் இன்னும் அடிப்படை வசதிகளேனும் இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பகுதிகளில் உள்ள மக்கள் கடந்த தேர்தல்களில் அரசாங்க தரப்புக்கு வாக்களித்திருக்காமையே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் புலம்பெயர்ந்த அமைப்புகள் தங்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவிகளை வழங்குமாறு இந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கஞ்சா வைத்திருந்தவர்களுக்கு அபராதம்
கஞ்சா வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவருக்கும் அபராதம் விதித்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் என்.எம்.அப்துல்லா தீர்ப்பளித்தார்.
இச்சந்தேக நபர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் என்.எம்.அப்துல்லா முன்னிலையில் நேற்று புதன்கிழமை ஆஜர்படுத்திய போதே, அவர் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
ஒவ்வொருவரையும் 10,000 ரூபாவை அபராதமாக செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் கஞ்சா வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்த 3 பேரையும் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு காத்தான்குடி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்த அபாரதத் தொகையை இந்த மூவரும் செலுத்திய பின்னர் விடுதலை செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவத்தின் பொறுப்புணர்ச்சி குறித்து ரோசி சேனாநாயக்க கேள்வி
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 02:48.13 AM GMT ]
இராணுவத்தின் பொறுப்புணர்ச்சி குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
வெலிவேரிய சம்பவத்தின் போது இராணுவத்தினர் நடந்து கொண்ட விதம் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.
இவ்வாறான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் போது யார் உத்தரவு பிறப்பித்தாலும் இராணுவத்தினர் பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட்டிருக்க வேண்டும்.
பயங்கரவாதிகள் அல்லது குற்றவாளிகளுக்கு எதிராக தாக்கதல் நடத்தப்படவில்லை.
குடிநீரைக் கேட்டு போராடிய அப்பாவி மக்களே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கம் குற்றங்களைச் செய்தால் அதனை சுட்டிக்காட்ட வேண்டும்.
வெலிவேரிய தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்ள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten