ஆழும் கன்சர்வேட்டிவ் கட்சியின் இந்த முடிவை லேபர் கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது. பிரித்தானியாவில் உள்ளவர்களை, நாய் பிடிப்பது போல இவ்வாறு பிடிக்க முயலவேண்டாம் என்று அக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவுக்கு என்று ஒரு பழம்பெரும் மரபு உள்ளது. மனிதநேயத்தோடு நடந்துகொள்ளுமாறும் மேலும் பல கட்சிகள் தெரிவித்துள்ளார்கள். பல்லின மக்கள் வாழும் லண்டனில் இவ்வாறு ஒருவரை அழைத்து அவரைச் சோதிப்பது, தனிப்பட்ட நபர் ஒருவரை அவமதிக்கும் செயலாக இருக்கும், என்று பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் இதனை நடைமுறைப்படுத்த டேவிட் கமரூன் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது இவ்வாறு இருக்கையில், இலங்கையில் நடக்கவுள்ள காமன்வெலத் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள டேவிட் கமரூன் இலங்கை செல்கிறார் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது. அவர் பிரித்தானியாவில் உள்ள சுமார் 4 லட்சம் தமிழர்களின் விருப்பு வெறுப்பு என்ன என்று தெரியாது நடந்துகொள்வதாகவும் அவர் மீது தமிழர்கள் குற்றஞ்சுமதியுள்ளார்கள்.
இனிவருங்காலங்களில் நடக்கவுள்ள தேர்தலில் , பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் லேபர் கட்சிக்கே(Labour) தமது வாக்குகளை இட்டு டேவிட் கமரூன் போன்றவர்களுக்கு நல்ல பாடம் புகட்டவேண்டும் என்று பிரித்தானியாவில் உள்ள பல தமிழர்கள் கூறிவருவதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையமாகும்.
Geen opmerkingen:
Een reactie posten