தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 augustus 2013

உடைந்த போத்தலால் ஆசிரியர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்! வடமராட்சியில் சம்பவம்


இலங்கையில் வருடாந்தம் 56 ஆயிரம் குற்றச் செயல்கள்! தினமும் 113 வாகன விபத்துக்கள்!
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 06:03.22 AM GMT ]
இலங்கையில் வருடாந்தம் கொலை, பாலியல் வல்லுறவு, கொள்ளை போன்ற பிரதானமான குற்றச் செயல்கள் தொடர்பில் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருடாந்தம் மக்களிடம் இருந்து 8 முதல் 9 பில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.
சமூகத்தில் ஒழுக்கம் சீர்குலைந்து போயுள்ளதால், இவ்வாறு குற்றச் செயல்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காமினி நவரட்ன தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு முழுவதும் பெயர் பெற்ற 43 ஆயிரத்து 723 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றச் செயல்களில் இந்த நபர்களே ஈடுபட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாட்டு மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக பிரஜைகள் பொலிஸ் சேவை என்ற பெயரில் விசேட பொலிஸ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களைப் பங்குபெறச் செய்து இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இலங்கையில் தினமும் 113 வாகன விபத்துக்கள் நிகழ்கின்றன
தினமும் காலையில் வீடுகளில் இருந்து வெளியில் செல்வோரில் 61 பேர் மீண்டும் வீடு திரும்புவதில்லை என போக்குவரத்து பொலிஸ் தலைமையகத்தின் அதிகாரி சேனக்க கமகே தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தெளிவூட்டும் கருத்தரங்கில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் தினமும் 113 வாகன விபத்துக்கள் நிகழ்கின்றன. இவற்றில் தினமும் 6 பேர் கொல்லப்படுகின்றனர். 55 பேர் காயமடைக்கின்றனர்.
காலையில் வீட்டில் இருந்து செல்வோரில் 61 பேர் மீண்டும் வீடு திரும்புவதில்லை. இந்த நிலைமை நாட்டுக்கு பெரும் சுமையாக உள்ளது.
வடமேல் மாகாணத்தின் தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் கடந்த ஆறு மாதங்களில் நடந்த வாகன விபத்துக்களில் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த பிரதேசத்தில் பலர் முச்சக்கர வண்டிகளையும் மோட்டார் சைக்கிள்களையும் பயன்படுத்துகின்றனர்.
நாம் வீதியில் செல்லும் போது, மிகவும் கவனமாக வீதியை பயன்படுத்த வேண்டும். சில சாரதிகள் மிகவும் குழப்பமான நிலைமையில் வீதியில் வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.
இதனால் காலையில் வீட்டில் இருந்து வெளியில் செல்பவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்புவார்களா இல்லையா என்ற நிலையற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்தளவில் தற்போது வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன என்றார்.

உடைந்த போத்தலால் ஆசிரியர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்! வடமராட்சியில் சம்பவம்
[ வெள்ளிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2013, 06:14.36 AM GMT ]
வடமராட்சி, நெல்லியடி குஞ்சர் கடையடிப் பகுதியில் உடைந்த போத்தல் தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வடமராட்சி,  இமையாணன் குஞ்சர் கடையடியைச் சேர்ந்த மகாலிங்கம் சந்திரகுமார் (வயது-26)  என்பவர் மீதே நேற்று இரவு 8.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவராலே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குஞ்சர் கடையடி மாஸ்டர் வீதியூடாக கைத்தொலைபேசியில் கதைத்தவாறு இவர் வீடு நோக்கி நடந்து சென்ற வேளை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவரது முதுகுப் பகுதியில் உடைத்த போத்தலால் குத்திவிட்டுச் சென்றுள்ளனர்.
படுகாயமடைந்த ஆசிரியர் உடனடியாக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அதேவேளை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக இவர் மீது இனந்தெரியாதோர் இவரது வீட்டுவாசலில் வைத்து பொல்லால் தலையில் தாக்கியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ள நிலையில் மீண்டும் உடைந்த போத்தல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten