தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 augustus 2013

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்: பிரித்தானியா!


கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற முஸ்லிம் பள்ளிவாசல் மீதான தாக்குதல் தொடர்பாக பிரித்தானியா கவனம் செலுத்தியுள்ளது.
முஸ்லிம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய விசாரணைகளை நடத்த வேண்டும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் அலிஸ்டயார் பேர்ட் வலியுறுத்தியுள்ளார்.
அச்சமின்றி, தமது மதங்களை வழிப்பட சகல மக்களுக்கு உள்ள உரிமைகளை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கிராண்ட்பாஸ் பகுதியில் இரண்டு நாட்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய பள்ளிவாசல் மீதான தாக்குதல் அதனை தொடர்ந்து ஏற்பட்ட சம்பவங்களுக்கு நேற்று தீர்வு காணப்பட்டது.
அதன் ஒரு கட்டமாக பழைய பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த போதி மரம் இன்று வெட்டி சாய்க்கப்பட்டது. அத்துடன் தற்காலிக இடத்தில் இயங்கிய பள்ளிவாசல் பழைய இடத்திற்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பழைய பள்ளிவாசலுக்கு மேலதிக இடத்தை வழங்குவதற்காக போதி மரத்தை வெட்டி சாய்க்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

Geen opmerkingen:

Een reactie posten