[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 01:07.11 AM GMT ]
கம்பளை நுவரெலிய பாதையில் உள்ள பழைய பாலத்தில் இந்த பதாகை தொங்கவிடப்பட்டிருந்தது.
இந்த பதாகையை அகற்றுமாறு கோரப்பட்ட போதும் அது இடம்பெறவில்லை.
இந்தநிலையில் நேற்று அந்த பதாகை அகற்றப்பட்டதாக தேர்தல்களுக்கான கண்காணிப்புக்குழுவான கபே தெரிவித்துள்ளது.
பொலிஸாரிடம் இது தொடர்பாக முறையிடப்பட்ட போதும் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை.
இதனையடுத்து தேர்தல்கள் ஆணையாளர் எடுத்த நடவடிக்கை காரணமாகவே குறித்த பதாகை அகற்றப்பட்டதாக கபே சுட்டிக்காட்டியுள்ளது.
வெலிவேரியவில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்! அமெரிக்கா
[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 02:23.23 AM GMT ]
அத்துடன், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உரிமையையும் இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரியும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த 2ம் திகதி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில் வாசிங்டனில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜெனிபர் பசாகி மற்றொரு அறிக்கையை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
வெலிவேரியவில் அண்மையில் நிராயுதபாணிகளாக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து அமெரிக்கா கவலை கொள்கிறது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்லாத் தரப்புகளும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையை இலங்கை அரசாங்க அதிகாரிகள் மதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
குறிப்பாக, கத்தோலிக்க தேவாலயம் ஒன்றினுள் அடைக்கலம் தேடிய பொதுமக்கள் தாக்கப்பட்டதாக வரும் தகவல்கள் குறித்து நாம் கவலை கொள்கிறோம். மத வழிபாட்டு இடமொன்றில் நடத்தப்பட்ட வன்முறையை எந்த வகையிலும் மன்னிக்க முடியாது.
வெலிவேரிய வன்முறைகள் தொடர்பாக எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு நீதியான விசாரணையை நடத்தி, அதன் முடிவுகள் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
நம்பகமான அந்த விசாரணைப் பொறிமுறை மூலம், தவறு செய்தவர்கள் எவராயினும் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten